கல்வி & பொது அறிவுச் செய்திகள் (15.04.2025)
1) நாளை தமிழக முதல்வர் தலைமையில் துணைவேந்தர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
2) ஆயிரம் ஆண்டு அழுக்கை அகற்றி சமூக நீதியை நிலைநாட்டுவோம்
என்று முதல்வர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் தெரிவித்துள்ளார்.
3) கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில்
25 சதவீத இலவச மாணவர் சேர்க்கை அடுத்த வாரம் துவங்குகிறது.
4) ஆளில்லா விமானங்கள் (டிரோன்கள்) மற்றும் ஏவுகணைகளை வெற்றிகரமாக
அழிக்கும் லேசர் ஆயுத அமைப்பைப் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு
(டிஆர்டி) வெற்றிகரமாகச் சோதித்துப் பார்த்தது.
5) தமிழகத்தில் ஏப்ரல் 17 வரை வெப்ப அலை வீசும். ஏப்ரல் 19
வரை மழைக்கும் வாய்ப்பு உள்ளது.
6) இந்தியாவின் மத்திய வங்கி (ரிசர்வ் வங்கி) தனக்கான புலன
அலைவரிசையைத் (வாட்ஸ்ஆப் சேனல்) துவங்கியது.
7) திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கலைப்புலி ஜி.
சேகரன் காலமானார்.
8) கணினி மற்றும் அலைபேசிகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பிலிருந்து
விலக்கு அளிப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
Education & GK News
1) A meeting of Vice Chancellors will be held tomorrow
under the chairmanship of the Tamil Nadu Chief Minister.
2) Chief Minister said at Ambedkar’s birth anniversary
that he will remove a thousand years of dirt and establish social justice.
3) 25 percent free admission in private schools as per
the Right to Compulsory Education Act will start next week.
4) The Defence Research and Development Organisation
(DRDO) has successfully tested a laser weapon system that can successfully
destroy drones and missiles.
5) Heat wave will prevail in Tamil Nadu till April 17.
There is a possibility of rain till April 19.
6) The Reserve Bank of India (RBI) has started its own WhatsApp
channel.
7) Film producer and director Kalaipuli G. Sekaran has
passed away.
8) Donald Trump has announced that computers and mobile
phones will be exempted from reciprocal taxation.
No comments:
Post a Comment