Monday, 7 April 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (08.04.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (08.04.2025)

1) திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

2) விபத்துகளைத் தவிர்க்க சென்னை மாநகரப் பேருந்து ஓட்டுநர்களுக்கு தினந்தோறும் மது பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

3) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உருவாக்கியுள்ள வர்த்தகப் போரின் எதிரொலியாக உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகளில் நேற்று ரத்த ஆறு ஓடியது. நேற்றைய திங்கள் கிழமை வர்த்தகமானது வரலாற்றில் மீண்டும் ஒரு ‘கருப்புத் திங்கள்’ தினமானது.

4) ஜப்பான் பங்குச் சந்தையான நிக்கேயில் ஏற்பட்ட வீழ்ச்சி அதிகபட்ச வரம்பு எல்லையைத் தாண்டியதால் சந்தை செயல்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. இறுதியாக அது 8 சதவீதச் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

5) இந்தியப் பங்குச் சந்தைகள் 5 சதவீதம் வரையிலான சரிவை எதிர்கொண்டு இறுதியாக மூன்று சதவீதத்திற்கும் அதிகமான சரிவில் நிலைகொண்டன.

6) ஹாங்செங் குறியீடு 13 சதவீத சரிவைச் சந்தித்தது.

7) உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான முக்கிய பங்குச் சந்தைகளும் 4 சதவீதத்திற்கும் அதிகமான சரிவைச் சந்தித்தன.

8) உலகில் நடைபெற்று வரும் வர்த்தகப் போரின் எதிரொலியாக உலகப் பொருளாதார பெருமந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 60 சதவீதம் அதிகரித்துள்ளது.

9) அமெரிக்காவின் நிதி நிலையைச் சரி செய்ய அதிக வரி விதிப்பைத் தவிர வேறு வழிகள் இல்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

10) அண்ணா பல்கலைக்கழக வளாகத் தேர்வில் தேர்வு பெற்றோர் 38 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத குறைவான அளவாகும்.

11) வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளது. இதனால் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பலத்த இடியுடன் கூடிய கோடை மழை 12 ஆம் தேதி வரை நீடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Education & GK News

1) The Thiruvarur Thyagarajar Temple ‘Azhi Therottam’ was held with great pomp and show yesterday. Thousands of devotees participated and pulled the chariot.

2) To avoid accidents, Chennai city bus drivers are being tested for alcohol daily.

3) In response to the trade war initiated by US President Donald Trump, a river of blood flowed in stock markets around the world yesterday. Yesterday, Monday's trading was again a 'Black Monday' day in the history.

4) The Japan share market was suspended as the fall in the Japanese stock market Nikkei crossed the circuit limit. It finally closed trading with a decline of 8 percent.

5) Indian stock markets faced a decline of up to 5 percent and finally settled at a decline of more than three percent.

6) The Hang Seng index experienced a decline of 13 percent.

7) Most major stock markets around the world also experienced a decline of more than 4 percent.

8) The risk of a global economic recession has increased by 60 percent due to the ongoing trade war.

9) Trump has said that there is no other way to fix the US financial situation except by imposing higher taxes.

10) The pass percentage in the Anna University campus exam has dropped to 38 percent. This is the lowest level in the last three years.

11) A low pressure area has formed in the Bay of Bengal. Due to this, there is a possibility of heavy thunderstorms in Tamil Nadu and Puducherry, which will continue till the 12th.

No comments:

Post a Comment