எட்டாம் வகுப்பு
இயல் – 7
திருப்புதல்
1) கலிங்கத்துப் பரணி – மனப்பாடப் பகுதி
வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி
மறைவர் சிலர் வழி தேடி வன்பிலம்
இழிவர் சிலர்சிலர் தூறு மண்டுவர்
இருவர் ஒருவழி போகல் இன்றியே
ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர்
உடலின் நிழலினை வெருவி அஞ்சினர்
அருவர் வருவர் எனா இறைஞ்சினர்
அபயம் அபயம் எனநடுங்கியே.
2) பகத்சிங் கண்ட கனவு யாது?
1) சதி வழக்கில் பகத்சிங்
கைது செய்யப்பட்டுத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டார்.
2) தூக்குத் தண்டனை
கைதியாய்ப் பகத்சிங் இருந்த போதும் இந்திய சுதந்திரத்தைக் கனவு கண்டார்.
3) எம்.ஜி.ஆர் நாடகத் துறையில் ஈடுபடக் காரணம்
யாது?
1) எம்.ஜி.ஆர் இளமைக்
காலத்தில் வறுமையின் கொடுமையில் வாடினார்.
2) வறுமையின் காரணமாகவே
எம்.ஜி.ஆர் நாடகத்துறையில் ஈடுபட்டார்.
4) தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக எம்.ஜி.ஆர்
ஆற்றிய பணிகள் யாவை?
1) எம்.ஜி.ஆர் அவர்கள்
தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தினார்.
2) மதுரையில் ஐந்தாம்
உலகத்தமிழ் மாநாட்டை நடத்தினார்.
3) தஞ்சையில் ஆயிரம்
ஏக்கர் பரப்பளவில் தமிழ்ப் பல்கழகத்தைத் தோற்றுவித்தார்.
5) சந்திப்பிழை என்றால் என்ன?
1) வல்லினம் மிகும்
இடங்களில் மிகாமல் எழுதுவதும், மிகாத இடங்களில் மிகும்படி எழுதுவதும் சந்திப்பிழை ஆகும்.
2) சந்திப்பிழையை ஒற்றுப்பிழை
எனவும் கூறுவர்.
6) வல்லினம் மிகும் இடங்கள் ஐந்தினைக் கூறுக.
1) சுட்டுத்திரிபு
2) வினாத்திரிபு
3) உவமைத்தொகை
4) உருவகம்
5) திசைப்பெயர்கள்
7) அறிவுசால் ஔவையார் எனும் நாடகத்தைச் சுருக்கி
எழுதுக.
ஔவையார் அதியமான் அவையில் நெடுங்காலம்
தங்கியிருந்தார். அதியமான் ஔவைக்கு அரிய நெல்லிக்கனியைத் தந்தான். அதியமானின் தமிழ்ப்
பற்றைக் கண்டு ஔவையார் உள்ளம் நெகிழ்ந்தார்.
அதியமானின் பக்கத்து நாட்டு அரசன் தொண்டைமான்
ஆவான். அவன் அதியமான் நாட்டின் மீது போர் தொடுக்க எண்ணினான். இத்தகவலை அறிந்த அதியமான்
போரினால் ஏற்படும் இழப்புகள் குறித்து கவலை அடைந்தான்.
அதியமானின் மனக்கவலையை அறிந்த ஔவையார்
தொண்டைமானிடம் தூது செல்ல முடிவெடுத்தார்.
தூது வந்த ஔவையாரைத் தொண்டைமான் வரவேற்றான்.
தனது படைக்கலக் கொட்டிலை ஔவையாருக்குத் தொண்டைமான் காட்டினான். அதைக் கண்ட ஔவையார் படைக்கலன்கள் புதிதாக இருப்பதைச் சுட்டிக்
காட்டினார். ஆனால் அதியமானின் படைக்கலன்கள் குருதி படிந்து, போரில் ஏற்பட்ட பழுதுகளோடு
இருப்பதையும் ஔவையார் குறிப்பிட்டார்.
ஔவையார் சுட்டிக் காட்டியதன் உட்பொருளை
உணர்ந்த தொண்டைமான் போரிடப் போவதில்லை என்று
முடிவெடுத்தான். இவ்வண்ணம் ஔவையார் தனது அறிவாற்றலால்
போரைத் தடுத்துச் சமாதானத்தை உருவாக்கினார்.
*****
No comments:
Post a Comment