ஏழாம் வகுப்பு – மூன்றாம் பருவம்
– கணக்கு
திருப்புதல் & மீள் பார்வை
I. எண்ணியல்
1) 123.37 ஐ ஒரு தசம
இடத்திருத்தமாக எழுதுக.
2) 25.8 + 18.53 இன்
மதிப்பைக் காண்க.
3) 7 லிருந்து
3.235ஐக் கழிக்க.
4) 3.8 செ.மீ பக்கமுள்ள
சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு காண்க.
5) 52.3 × 0.1 இன்
மதிப்பைக் காண்க.
6) 4.08 ÷ 4 இன் மதிப்பைக்
காண்க.
7) ஒரு சக்கரம் ஒரு
சுற்றுக்கு 49.7 செ.மீ தூரத்தைக் கடக்குமானால் 10 சுற்றுகளுக்குக் கடக்கும் தூரம் எவ்வளவு?
II. சதவீதமும்
தனிவட்டியும்
1) 36/50
ஐச் சதவீதமாக்குக.
2) 65% ஐப் பின்னமாக்குக.
3) 0.71 ஐச் சதவீதமாக்குக.
4) அன்பு ஒரு தேர்வில்
500க்கு 436 மதிப்பெண்கள் பெற்றால் அதன் சதவீதம் காண்க.
5) ஒரு புத்தகக் கடையில்
70 பத்திரிகைகளில் 14 நகைச்சுவை பத்திரிகைகள் எனில் அதன் சதவீதம் காண்க.
6) ரூ. 35,000/-க்கு
9 சதவீதம் வட்டி வீதம் 2 ஆண்டுகளுக்குக் கிடைக்கும் தனிவட்டி மற்றும் கூடுதலைக் காண்க.
III. இயற்கணிதம்
1) (2x + 5)2
இன் விரிவாக்கம் காண்க.
2) 1032
இன் மதிப்பு காண்க.
3) 25a2
– 49b2 ஐக் காரணிப்படுத்துக.
4) y2
+ 20y + 100 ஐக் காரணிப்படுத்துக.
5) 2a + 3 ≤
13, a ஒரு முழு எண் எனில் தீர்வுகளைக் காண்க.
IV. வடிவியல்
1) ஒரு புள்ளியைப்
பொருத்த திருப்பம் …………
2) ஒரு கோட்டைப் பொருத்த
திருப்பம் …………
3) பிரதிபலிப்பு அல்லது
திருப்புதல் இல்லாத நகர்வு ………….
4) r1
= 3 செ.மீ, r2 = 5 செ.மீ ஆர அளவுகள் கொண்ட பொதுமைய வட்டங்கள் வரைந்து வட்ட
வலயத்தின் அகலத்தைக் காண்க.
V. புள்ளியல்
1) 6, 4, 10, 12,
5 இன் சராசரி காண்க.
2) 1, 2, 3, 4,
5, 6 இன் முகடு காண்க.
3) 12, 11, 15,
13, 14 இன் இடைநிலை காண்க.
4) 15 புத்தகங்களின்
சரசாரி விற்பனை விலை ரூ. 235 எனில் மொத்த விற்பனை விலையைக் காண்க.
5) 10 மதிப்புகளின்
சராசரி 22 எனக் கண்டறியப்பட்டது. இதனுடன் 44 எனும் மதிப்பைச் சேர்த்தால் புதிய சராசரி
காண்க.
VI. தகவல் செயலாக்கம்
1) ஆரம்பம் என்பதன்
குறியீடு யாது?
2) இணைகரம் என்பது
எதன் குறியீடு?
3) தீர்மானப் பெட்டியின்
குறியீடு யாது?
4) செவ்வகக் குறியீடு
எதற்குப் பயன்படுகிறது?
5) உனது இரண்டாம்
பருவத் தேர்வு மதிப்பெண்களின் சராசரி கண்டுபிடிப்பதற்கான செயல்வழிப் படத்தை வரைக.
*****
Good attempt.keep it sir.
ReplyDeleteVimal
ReplyDeleteVimal
ReplyDeleteVimalraj
ReplyDelete