Friday, 11 April 2025

கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் (11.04.2025)

கல்வி & பொதுஅறிவுச் செய்திகள்

1) பூப்படைந்த மாணவியை வெளியில் தேர்வு எழுத வைத்த, கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே செங்குட்டைபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியின் முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

2) சூன் 12 இல் மேட்டூர் அணையைத் தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளார்.

3) இந்திய இலக்கிய விருதுகளில் பெருமைமிகு விருதான பாரதிய பாஷா விருது தமிழ் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட உள்ளது.

4) இரண்டே நாட்களில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. சவரனுக்கு 2680 ரூபாய் அதிகரித்தது.

5) அமெரிக்க அரசின் அதிரடி வரி விதிப்புகள் 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6) 2024 – 2025 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 82 ஆயிரம் கோடியைக் கடந்தது.

7) டொமினிக் குடியரசில் இரவு விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 218 ஆக உயர்ந்துள்ளது.

8) 128 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் மட்டைப் பந்து சேர்க்கப்பட உள்ளது. 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் மட்டைப்பந்து இடம்பெற உள்ளது.

Education & GK News

1) The principal of a private school in Senguttaipalayam near Pollachi in Coimbatore district, who made a female student write an exam outside, has been suspended.

2) The Tamil Nadu Chief Minister is set to open the Mettur Dam on June 12.

3) The Bharatiya Bhasha Award, the highest award in Indian literary awards, is to be presented to Tamil writer S. Ramakrishnan.

4) The price of gold has risen sharply in just two days. The price of a sovereign has increased by Rs 2,680.

5) It has been reported that the US government's aggressive tax measures will be suspended for 3 months.

6) India's exports crossed Rs 82,000 crore in the 2024-2025 financial year.

7) The death toll in a nightclub roof collapse accident in the Dominican Republic has risen to 218.

8) Cricket is to be included in the Olympics after 128 years. Cricket will be featured in the 2028 Olympics to be held in the United States.

No comments:

Post a Comment