ஏன் வேண்டும் மருத்துவக் காப்பீடு?
நோயற்ற
வாழ்வே குறைவற்ற செல்வம் என்றார்கள் நம் முன்னோர்கள்
எத்தனை
சத்தியமான வாக்கியம் அது.
இன்று
நோய்களுடன் போராடி மருத்துவமனை மற்றும் மருந்துகளுக்காகச் செலவிடும் தொகையை ஒப்பு நோக்கும்
போது நம் முன்னோர்கள் சொன்னது எவ்வளவு தீர்க்கமானது என்பது புரிகிறது அல்லவா!
மகாத்மா
காந்தியடிகளும், “ஆரோக்கியமே உண்மையான செல்வம், தங்கம் மற்றும் வெள்ளி அல்ல.” என்கிறார்.
மாரடைப்பு,
பக்கவாதம், விபத்து போன்ற அவசர சிகிச்சை நிலைகளை நினைத்துப் பாருங்கள். அடுத்து என்ன
நடக்கும் என்று தெரியாத நிலை, மருத்துவ பரிசோதனைகளுக்காகத் திக் திக் என்று காத்திருக்கும்
நேரம், முடிவில் எவ்வளவு என்று தெரியாத மருத்துவச் செலவை எதிர்கொள்ளும் நிலை என்று
அந்நிலைகள் எவ்வளவு சோதனையானவை!
எந்த
நோயிலும் நோயின் பாதிப்பு உடனடியாகத் தெரிவதில்லை. நோய் முற்றிய நிலையிலேயே தெரிகிறது.
இது திடீரென நிகழ்வதால் அப்போது ஏற்படும் மருத்துவ பேரிடர் நிலையை எதிர்கொள்ள முடியாமல்
பலர் நிலைகுழைந்து போய் விடுகின்றனர். நோயிலிருந்து மீண்டவர்கள் கூட மருத்துவச் செலவைப்
பார்த்து மீண்டும் நோய்வாய்ப் படுகின்றனர்.
இதற்கு
ஒரு தீர்வாக மருத்துவ காப்பீடு எடுப்பது பயன் தரும்.
எடுக்கும்
மருத்துவக் காப்பீடு ஒருங்கிணைந்ததாக தீவிர நோய் பாதிப்பு மற்றும் தனிநபர் விபத்து
போன்றவற்றையும் உள்ளடக்கிய முழுமையான காப்பீடாக இருக்க வேண்டும்.
மருத்துவ
காப்பீட்டிற்காக சில ஆயிரங்களைச் செலவு செய்ய யோசித்தால், பின்னர் லட்ச கணக்கில் செலவு
செய்ய வேண்டியிருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு குடும்பத்தினருக்குத் தேவையான அளவுக்கு
மருத்துவ காப்பீடு எடுப்பதும், நோயற்ற ஆரோக்கிய வாழ்க்கைக்குத் தேவையான பயிற்சிகளை
மேற்கொள்வதும் தற்போதைய சூழ்நிலையில் நலமாகும் என்கின்றனர் குடும்ப நிதி ஆலோசர்கள்.
வள்ளுவரும்,
“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்” (குறள், 948)
என்கிறார்.
இன்றைய கால கட்டத்தில் இது மருத்துவக் காப்பீட்டிற்கும் பொருந்தும்.
*****
No comments:
Post a Comment