Thursday, 3 April 2025

எட்டாம் வகுப்பு - இயல் – 8 - திருப்புதல்

எட்டாம் வகுப்பு

இயல் – 8

திருப்புதல்

1) ஒன்றே குலம் – மனப்பாடப் பகுதி

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமனில்லை நாணாமே

சென்றே புகும் கதியில்லைநும் சித்தத்து

நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்மினே

 

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்

நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்

படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.

 

2) குணங்குடியார் பராபரத்திடம் வேண்டுவன யாவை?

1)  இறைவன் மேலான பரம்பொருளாய் உள்ளத்தில் விளங்க வேண்டும்.

2)  தீய எண்ணங்களை அழித்து அறிவு ஒளியை வழங்க வேண்டும்.

3)  பணத்தின் மீதுள்ள ஆசையை அறுத்திட உதவிட வேண்டும்.

4)  உண்மை அறிவை இறைவன் உணர்த்திட வேண்டும்.

5)  ஐம்புலன்களை அடக்கி ஆளும் படிப்பைத் தர வேண்டும்.

 

3) அயோத்திதாசரின் ஐந்து பண்புகள் யாவை?

1)  நல்ல சிந்தனை

2)  சிறப்பான செயல்

3)  உயர்வான பேச்சு

4)  உவப்பான எழுத்து

5)  பாராட்டத்தக்க உழைப்பு

 

4) அரசியல் விடுதலை பற்றி அயோத்திதாசரின் கருத்துகள் யாவை?

1)  அரசியல் விடுதலை என்பது வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமன்று.

2)  அரசியல் விடுதலை என்பது மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவது ஆகும்.

3)  சுயராஜ்ஜியத்தின் நோக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக மட்டும் இருக்கக் கூடாது.

4)  சுயராஜ்ஜியம் என்பது மக்கள் வாழ்வில் சமூக பொருளாதார வளர்ச்சியை உருவாக்க வேண்டும்.

5)  மக்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டால்தான் நாடு முன்னேறும்.

 

5) பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?

பா நான்கு வகைப்படும். அவையாவன,

1)  வெண்பா

2)  ஆசிரியப்பா

3)  கலிப்பா

4)  வஞ்சிப்பா

 

6) நண்பர்களின் இயல்பை அளந்து காட்டும் அளவுகோல் யாது?

1)  நமக்கு வரும் துன்பத்திலும் ஒரு நன்மை உண்டு.

2)  துன்பமே நண்பர்களின் உண்மையான இயல்பை அளந்து காட்டும் அளவுகோலாகும்.

*****

No comments:

Post a Comment