Sunday, 13 April 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (14.04.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (14.04.2025)

இன்று சட்டமேதை அம்பேத்கரின் 135 ஆவது பிறந்த நாள்.

1) தமிழ்நாட்டுக்கு விடுவிக்க வேண்டிய கல்வி நிதி 2152 கோடி ரூபாயை விடுவிக்கக் கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

2) தமிழகத்தில் இன்றிலிருந்து 61 நாட்கள் மீன் பிடி தடைக்காலம் அமலாகிறது.

3) தமிழ்நாட்டில் நடமாடும் கால்நடை மருத்துவமனை 8.98 லட்சம் கால்நடைகளுக்குச் சிகிச்சை அளித்துள்ளது.

4) பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராகத் தொடர்ந்து தான் செயல்படப் போவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

5) மேற்கு வங்கத்தில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் வெடித்த வென்முறையில் 3 பேர் உயிரிழந்தனர்.

6) அமெரிக்க வரி விதிப்பு பிரச்சனைகளால் உலகப் பொருளாதாரம் 3 சதவீதம் சுருங்கும் எனப் பொருளாதாரக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

7) அமெரிக்காவின் பாப் பாடகி கெட்டி பெர்ரி உட்பட 6 மகளிர் இன்று விண்வெளிக்குச் சுற்றுலா பயணம் செல்ல உள்ளனர். இப்பயணம் 11 நிமிடங்கள் நீடிக்கும். நியூ ஆரிஜின் நிறுவனத்தில் ப்ளு ஷெப்பர்ட் ராக்கெட் மூலம் இப்பயணம் நிகழ்த்தப்படுகிறது.

8) மியான்மரில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கும் 5.6 ரிக்டர் அளவாகப் பதிவாகியுள்ளது.

Education & GK News

Today is the 135th birth anniversary of Dr. Ambedkar.

1) The Tamil Nadu government has decided to file a case in the Supreme Court seeking the release of Rs 2152 crore in education funds due to Tamil Nadu.

2) A 61-day fishing ban will come into effect in Tamil Nadu from today.

3) A mobile veterinary hospital in Tamil Nadu has treated 8.98 lakh cattle.

4) Anbumani Ramadoss has said that he will continue to work as the leader of the Pattali Makkal Katchi.

5) Three people died in a clash that broke out during a protest against the Waqf Board Act amendment in West Bengal.

6) Economic forecasts have been released that the global economy will shrink by 3 percent due to US tax issues.

7) 6 women, including American pop singer Katy Perry, are going on a tourist trip to space today. The trip will last 11 minutes. The mission is being carried out by New Origin's Blue Shepard rocket.

8) Another earthquake in Myanmar has been recorded at a magnitude of 5.6.

No comments:

Post a Comment