Tuesday, 1 April 2025

எட்டாம் வகுப்பு - இயல் – 5 திருப்புதல்

எட்டாம் வகுப்பு

இயல் – 5

திருப்புதல்

1) பாடறிந்து ஒழுகுதல் – மனப்பாடப் பகுதி

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்

அன்பு எனப்படுவது தன்கிளை செறாமை

அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்

செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை

நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை

முறை எனப்படுவது கண்ஓடாது உயர் வௌவல்

பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்.

 

2) திருக்கேதாரத்தைச் சுந்தரர் எவ்வாறு வர்ணிக்கிறார்?

1)  திருக்கேதாரத்தில் இனிய தமிழ்ப் பாடல்கள் பாடப்படுகின்றன.

2)  பாடல்களுக்கு இனிமை சேர்க்கும் விதமாகப் புல்லாங்குழலும் மத்தளமும் இசைக்கப்படுகின்றன.

3)  பொன்வண்ண நீர் நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த்துளிகளை வாரி இறைக்கின்றன.

4)  யானைகள் மணிகளை வாரி இறைக்கின்றன.

5)  கிண் எனும் இசை திருக்கேதாரத்தில் முழங்குகின்றது.

 

3) பனையோலையால் உருவாக்கப்படும் பொருட்கள் யாவை?

1)  கிலுகிலுப்பை

2)  பொம்மைகள்

3)  சிறிய கொட்டான்கள்

4)  பெரிய கூடை

5)  சுளகு

6)  விசிறி

7)  தொப்பி

8)  ஓலைப்பாய்

 

4) பிரம்பினால் பொருள் செய்யும் முறையைக் கூறுக.

1)  முதலில் பிரம்பினை நெருப்பில் காட்டிச் சூடுபடுத்த வேண்டும்.

2)  சூடான பிரம்பை தேவையான வடிவத்திற்கேற்ப வளைக்க வேண்டும்.

3)  பின்னர் அதனைத் தண்ணீரில் நனைத்து வைத்து விட வேண்டும்.

4)  பிறகு இழைகளால் கட்டியும் சிறு ஆணிகளால் தைத்தும் தேவையான பொருட்களாக மாற்ற வேண்டும்.

 

 

5) தொகைநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

தொகைநிலைத் தொடர்கள் ஆறு வகைப்படும். அவையாவன,

1)  வேற்றுமைத் தொகை

2)  வினைத்தொகை

3)  பண்புத்தொகை

4)  உவமைத்தொகை

5)  உம்மைத்தொகை

6)  அன்மொழித்தொகை

 

6) சிறந்த ஆட்சியின் பண்புகளாகத் திருக்குறள் கூறுவது யாது?

1)  நன்கு ஆராய்தல்,

2)  நடுவுநிலையில் நிற்றல்

ஆகியன சிறந்த ஆட்சியின் பண்புகளாகும்.

*****

No comments:

Post a Comment