Thursday, 3 April 2025

எட்டாம் வகுப்பு இயல் – 9 - திருப்புதல்

எட்டாம் வகுப்பு

இயல் – 9

திருப்புதல்

1) மனிதர்களின் இயல்புகளாகக் கன்னிப்பாவை கூறுவன யாவை?

1)  அன்பு

2)  அறிவு

3)  கருணை

4)  இரக்கம்

5)  பொறுமை

6)  ஊக்கம்

7)  ஆராய்ந்து தெளிதல்

ஆகியவற்றை மனிதர்களின் இயல்புகளாகக் கன்னிப்பாவை கூறுகின்றது.

 

2) தோல்வி எப்போது தூண்டுகோலாகும்?

1)  உலகிற்கு ஒளியேற்ற எண்ணெயாய், திரியாய் ஒருவர் மாறினால் தோல்வியும் தூண்டுகோலாகும்.

2)  தோல்வி தூண்டுகோலாகும் போது வெற்றி உருவாகி வாழ்வில் ஒளியேற்றும்.

 

3) அம்பேத்கர் தன் பெயரை ஏன் மாற்றிக் கொண்டார்?

1)  மகாதேவ் அம்பேத்கர் என்ற ஆசிரியர் அம்பேத்கர் மீது அன்பும் அக்கறையும் கொண்டவராக விளங்கினார்.

2)  தம் ஆசிரியர் மீது கொண்ட அன்பினாலும் மதிப்பினாலும் தம் பெயரை அம்பேத்கர் என மாற்றிக் கொண்டார்.

 

4) இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக அம்பேத்கர் ஆற்றிய பணிகள் யாவை?

1)  1947 ஆகஸ்ட் 15 இல் நம் நாடு விடுதலை பெற்றது. அம்பேத்கர் சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

2)  அம்பேத்கர் அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

3)  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத அம்பேத்கர் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

4)  அம்பேத்கர் பல நாடுகளின் அரசியலமைப்புகளை நன்கு ஆராய்ந்து இந்திய அரசியலமைப்பை உருவாக்கினார்.

5)  அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு மிகச் சிறந்த சமூக ஆவணமாகப் போற்றப்படுகிறது.

 

5) பிறிது மொழிதல் அணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

1)  உவமையை மட்டும் கூறி அதன் மூலம் கூற வந்த கருத்தை உணர வைப்பது பிறிது மொழிதல் அணியாகும்.

2)  (எ.கா)   கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

நாவாயும் ஓடா நிலத்து.

 

6) தான், தாம் என்பதன் வேறுபாடு யாது?

1)  தான் என்பது ஒருமையைக் குறிக்கும்.

2)  தாம் என்பது பன்மையைக் குறிக்கும்.

*****

No comments:

Post a Comment