Wednesday, 2 April 2025

எட்டாம் வகுப்பு - இயல் – 6 - திருப்புதல்

எட்டாம் வகுப்பு

இயல் – 6

திருப்புதல்

1) உழவுத்தொழில் குறித்து தகடூர் யாத்திரை கூறுவன யாவை?

1)  சேர மன்னரின் நாட்டில் வருவாய் சிறந்து விளங்குகின்றது.

2)  வயலில் விதைத்த விதைகள் நன்றாக முளை விடுகின்றன.

3)  பயிர்கள் நன்கு வளர குறைவின்றி மழை பொழிகின்றது.

4)  பயிர்கள் நன்கு செழித்து வளர்கின்றன.

5)  பயிர்களில் கதிர் முற்றி நன்முறையில் அறுவடை நடைபெறுகின்றது.

6)  நன்முறையில் விளைந்த விளைச்சலால் உழவர்களின் வாழ்வு செழிக்கின்றது.

7)  உழவர்களின் ஆரவார ஒலியால் நாரைகள் அஞ்சி நடுங்குகின்றன.

 

2) தமிழ்நாட்டின் ஹாலந்து என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?

1)  தமிழ்நாட்டின் ஹாலந்து என அழைக்கப்படும் ஊர் திண்டுக்கல் ஆகும்.

2)  திண்டுக்கல் மலர் உற்பத்தியில் தமிழ்நாட்டில் முதலிடம் வகிப்பதால், அது தமிழ்நாட்டின் ஹாலந்து என அழைக்கப்படுகிறது.

 

3) கரூர் மாவட்டம் குறித்த செய்திகளை விரிவாக எழுதுக.

1)  கரூர் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாகும்.

2)  முற்காலத்தில் சேரர்களின் தலைநகரமாக விளங்கிய வஞ்சி மாநகரம் கரூர் ஆகும்.

3)  கிரேக்க அறிஞர் தாலமி கரூரை முதன்மையான வணிக மையமாகக் குறிப்பிடுகிறார்.

4)  கரூர் மாவட்டத்தில் நெல், சோளம், கேழ்வரகு, கம்பு, கரும்பு போன்றவை பயிரிடப்படுகின்றன.

5)  கரூர் மாவட்டத்தில் கல்குவாரித் தொழிற்சாலைகள் நிறைந்து காணப்படுகின்றன.

6)  கைத்தறி ஆடைகளுக்கும் கரூர் மாவட்டம் பெயர் பெற்றது.

7)  பேருந்து கட்டுமானத் தொழிலும் கரூர் மாவட்டத்தில் சிறந்து விளங்குகிறது.

 

4) இயல்பு புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்கு.

1)  நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமுமின்றி இணைவது இயல்பு புணர்ச்சி ஆகும்.

2)  எடுத்துக்காட்டு : தாய் + மொழி = தாய்மொழி

 

5) மரபுத்தொடர்கள் சிலவற்றைக் கூறுக.

1)  கொடிகட்டிப் பறத்தல் – புகழ் பெற்று விளங்குதல். (எ.கா) திண்டுக்கல் பூட்டுகள் தயாரிப்பில் கொடி கட்டிப் பறக்கும் நகரமாக உள்ளது.

2)  அவசரக் குடுக்கை – எண்ணிச் செயல்படாமை. (எ.கா) பெரியோர்கள் முன்னிலையில் அவசரக் குடுக்கையாகச் செயல்படக் கூடாது.

*****

No comments:

Post a Comment