கல்வி & பொது அறிவுச் செய்திகள் (12.04.2025)
1) 84.76 கோடி செலவில் 326 நூலகக் கட்டிடங்களை முதல்வர் திறந்து
வைத்தார்.
2) இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையில் தமிழகம்
முதலிடத்தில் உள்ளது.
3) தமிழக கோயில்களில் காணிக்கையாகப் பெறப்பட்ட 1074 கிலோ தங்கம்
உருக்கி எடுக்கப்பட்டு பாரத மாநில வங்கியில் (எஸ்.பி.ஐ) இந்து அறநிலையத் துறையால் முதலீடாகச்
செய்யப்பட்டுள்ளது.
4) அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சி இடையே தமிழக சட்டசபை தேர்தலுக்கான
கூட்டணி உருவாகியுள்ளதாக இரு கட்சிகளும் அறிவித்துள்ளன.
5) மகளிர் குறித்து தரக்குறைவாகப் பேசியதாகத் திமுக துணைப்
பொதுச் செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி நீக்கப்பட்டார். திருச்சி சிவா புதிய துணைப்
பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
6) கோடையைச் சமாளிக்க 6 வகையான பீர்களை கர்நாடகா மற்றும் தெலுங்கானாவிலிருந்து
கொள்முதல் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
7) மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய இந்தியாவுக்கு
நாடு கடத்தப்பட்ட தஹாவூர் ராணாவிடம் தேசிய புலனாய்வு முகமை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
8) ஒரு சவரன் தங்கத்தின் விலை 70 ஆயிரத்தை நெருங்கியது.
9) தனுஷின் 56 ஆவது படத்தை மாரி செல்வராஜ் இயக்குவதாக அறிவிப்பு
வெளியாகியுள்ளது. இதற்கு முன் தனுஷ் நடித்த கர்ணன் படத்தை மாரி செல்வராஜ் நான்கு ஆண்டுகளுக்கு
முன்பு இயக்கியது குறிப்பிடத்தக்கது.
Education & GK News
1) The Chief Minister inaugurated 326 library buildings
at a cost of Rs 84.76 crore.
2) Tamil Nadu ranks first in the number of medical
colleges in India.
3) 1074 kg of gold received as donations from Tamil Nadu
temples has been melted down and invested in the State Bank of India (SBI) by
the Hindu Charitable Trust Department.
4) The AIADMK and the Bharatiya Janata Party have
announced an alliance for the Tamil Nadu assembly elections.
5) Ponmudi was removed from the post of DMK Deputy
General Secretary for making derogatory remarks about women. Trichy Siva has
been appointed as the new Deputy General Secretary.
6) The TASMAC administration has decided to procure 6
types of beer from Karnataka and Telangana to cope with the summer.
7) The National Investigation Agency has started an
investigation into Thahavur Rana, who was extradited to India in connection
with the Mumbai terror attacks.
8) The price of a sovereign of gold has reached 70
thousand.
9) It has been announced that Dhanush's 56th film will
be directed by Mari Selvaraj. It is noteworthy that Mari Selvaraj previously
directed the film Karnan, which starred Dhanush, four years ago.
No comments:
Post a Comment