கல்வி & பொது அறிவுச் செய்திகள் (23.04.2025)
1) தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. சவரனுக்கு ஒரே நாளில்
2,200 ரூபாய் உயர்ந்து 74 ஆயிரத்தைக் கடந்தது.
2) பாரதிதாசன் பிறந்த நாள் தமிழ் வார விழாவாக ஏப்ரல் 29 முதல்
மே 5 வரை கொண்டாடப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
3) நாளை மறுநாள் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள்
மாநாடு ஊட்டியில் நடைபெற உள்ளது.
4) கடந்த நிதி ஆண்டில் டாஸ்மாக் மூலமாகத் தமிழக அரசுக்கு
48,344 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
5) அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் பிரதமர் நரேந்திர மோடியைச்
சந்தித்து இரு நாடு நல்லுறவு மற்றும் ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.
6) இரண்டு நாள் அரசு முறை பயணமாகப் பிரதமர் நரேந்திர மோடி சவுதி
அரேபியா சென்றடைந்தார்.
7) இந்தியாவில் 30 கோடி மக்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும்
அபாயம் உள்ளது.
Education & GK News
1) Gold prices have skyrocketed. Sovereign rose by Rs
2,200 in a single day to cross Rs 74,000.
2) The Tamil Nadu government has announced that
Bharathidasan's birthday will be celebrated as a Tamil week festival from April
29 to May 5.
3) The day after tomorrow, a Vice-Chancellors'
Conference will be held in Ooty under the chairmanship of Governor R.N. Ravi.
4) The Tamil Nadu government received an income of Rs
48,344 crore through TASMAC in the last financial year.
5) US Vice President JD Vance met Prime Minister
Narendra Modi and held discussions on bilateral relations and cooperation.
6) Prime Minister Narendra Modi reached Saudi Arabia on
a two-day official visit.
7) 30 crore people in India are at risk of being
affected by an earthquake.
No comments:
Post a Comment