கல்வி & பொது அறிவுச் செய்திகள் (18.04.2025)
1) உயர்கல்வி பாடத்திட்டத்தில் காலத்திற்கேற்ற மாற்றங்களைக்
கொண்டு வர வேண்டும் எனத் தமிழக முதல்வர் துணைவேந்தர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார்.
2) பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவைச் சேர்க்க வேண்டும்
எனவும் தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
3) பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை மாணவர்களிடையே பரப்பக்
கூடாது எனத் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
4) அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தில் இனி
அரிசி உப்புமாவுக்குப் பதிலாக பொங்கலும் சாம்பாரும் வழங்கப்படும்.
5) மகாராஷ்டிரப் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
6) தர்பூசணிப் பழங்களில் எவ்வித ரசாயனமும் செலுத்தப்படவில்லை
எனத் தமிழக அரசு உயர்நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது.
7) சீனப் பொருட்கள் மீது அமெரிக்கா 245 சதவீத வரி விதித்துள்ளது.
இது உலகளாவிய வர்த்தகப் போரை தீவிரப்படுத்தியுள்ளது.
8) சென்னையில் 5,20,032 டன் கட்டடக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளன.
9) பாதாம் பருப்பு உண்பதால் ரத்த அழுத்தத்தைத் தணிக்க முடியும்
என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
10) ஒரு சவரன் தங்கத்தின் விலை 71 ஆயிரத்தைக் கடந்தது.
Education & GK News
1) The Tamil Nadu Chief Minister has instructed the Vice
Chancellors to bring timely changes in the higher education curriculum.
2) The Tamil Nadu Chief Minister has also instructed to
include artificial intelligence in the curriculum.
3) The Tamil Nadu Chief Minister has said that
irrational ideas should not be spread among students.
4) Pongal and sambar will now be served in the breakfast
program for government school students instead of rice upma.
5) Hindi has been declared mandatory as the third
language in Maharashtra schools.
6) The Tamil Nadu government has informed the High Court
that no chemicals have been added to watermelons.
7) The US has imposed a 245 percent tax on Chinese
products. This has intensified the global trade war.
8) 5,20,032 tons of construction waste have been
recycled in Chennai.
9) Medical studies suggest that eating almonds can help
lower blood pressure.
10) The price of a sovereign gold has crossed 71
thousand.
No comments:
Post a Comment