கல்வி & பொது அறிவுச் செய்திகள் (17.04.2025)
1) பள்ளிகளில் மாணவர்களின் மோதலைத் தடுப்பது குறித்த முக்கிய
அறிவிப்பு ஏப்ரல் 24 இல் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
2) பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் அரிவாள் வீச்சில் ஈடுபட்டு
மாணவருக்கு 14 நாட்கள் நீதி மன்றக் காவலில் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
3) திருநெல்வேலி மாவட்டத்தில் மாணவர்களின் பைகளைத் தினந்தோறும்
சோதிக்க மாவட்டக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
4) நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் 37 அரசு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
5) தமிழில் மட்டுமே அரசாணைகள் வெளியிடப்பட வேண்டும் என்று தமிழ்
ஆட்சி மொழி சட்டத்தை அமல்படுத்தும் வகையில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
6) ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்க
நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
7) நியாய விலைக் கடைகளில் ஒரே நாளில் அனைத்துப் பொருட்களும்
கிடைக்கும் என உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி உறுதியளித்துள்ளார்.
8) மருத்துவமனைகளில் பிறந்த குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவமனைகளின்
அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.
9) அதிமுக – பாஜக கூட்டணியில் பாஜகவுக்கு ஆட்சியில் பங்கு கிடையாது
என எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
10) கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத வகையில் சென்னையில் ஏப்ரல்
மாதத்தில் 13 செ.மீ மழை பெய்து வெளுத்து வாங்கியது.
11) ஏப்ரல் 21 வரை தமிழகத்தில் மித மழைக்கு வாய்ப்பு உள்ளதாக
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12) 34 வருடங்களுக்குப் பிறகு விஜயகாந்த் நடித்த அவரது 100
ஆவது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் மீண்டும் 500 திரையரங்கங்களில் திரையிடப்பட உள்ளது.
Education & GK News
1) An important announcement on preventing student
clashes in schools will be issued on April 24, School Education Minister Anbil
Mahesh Poiyamozhi has said.
2) A student who was involved in a sickle attack at a
private school in Palayankottai has been ordered to be kept in a detention
center for 14 days in judicial custody.
3) The District Education Department has instructed the
Tirunelveli district to check students' bags daily.
4) 37 government colleges have been opened in Tamil Nadu
in four years.
5) The Tamil Nadu government has ordered that government
orders should be published only in Tamil, in order to implement the Tamil
Official Language Act.
6) Health Minister M. Subramanian has said that steps
will be taken to provide scholarships to children affected by HIV.
7) Food Minister Chakrapani has assured that all items
will be available in fair price shops on the same day.
8) The Supreme Court has warned that hospitals will be
de-recognized if a baby is kidnapped in hospitals.
9) Edappadi Palaniswami has stated that BJP will have no
role in the government in the AIADMK-BJP alliance.
10) Chennai received 13 cm of rain in April, the highest
in the last ten years.
11) The Meteorological Department has said that there is
a possibility of moderate rain in Tamil Nadu till April 21.
12) After 34 years, Vijayakanth's 100th film Captain
Prabhakaran will be screened again in 500 theaters.
No comments:
Post a Comment