144 தடை உத்தரவு என்றால் என்னவென்று தெரியுமா?
பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையும் உயிர்சேதம் எதுவும்
ஏற்படாத வகையில் தடுப்பதற்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த உத்தரவு
பிறப்பிக்கப்பட்ட இடத்தில் 5க்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவது தவறு. மீறி அங்கே நபர்கள்
கூடி, பொதுமக்களின் அமைதியை பாதிப்படைய செய்தால் அவர்களுக்கு இச்சட்டத்தின் பிரிவு
141 முதல் 149ன் படி 144 தடை உத்தரவை மீறியதற்காக அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை
அல்லது அபராத தொகை விதிக்கப்படும்.
|
மேலும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144 கூறுவதாவது,
|
Ø தொல்லை அல்லது எதிர்பார்க்கப்படுகிற அபாயம் ஆகிய அவசர நிலைகளில் உத்தரவு
பிறப்பிப்பதற்குள்ள அதிகாரம்.
|
Ø இந்தப் பிரிவின் படியான கட்டளை ஒன்று நெருக்கடி நிலைகளிலும், அல்லது
எவருக்கெதிராகக் கட்டளை குறிப்பிட்டனுப்பப்படுகிறதோ அவருக்கு முன்னறிவிப்பை,
உரிய காலத்தில் சார்வு செய்வதற்குச் சூழ்நிலைகள் இடங்கொடாத சந்தர்ப்பங்களிலும்
அவர் இல்லாமலேயே பிறப்பிக்கப்படலாம்.
|
Ø இந்தப் பிரிவின் படியான கட்டளையொன்று, குறிப்பிட்ட ஒருவருக்கு அல்லது
குறிப்பிட்ட இடம் அல்லது குறிப்பிட்ட அப்பகுதியில் அடிக்கடி வந்து போகிற அல்லது
பார்க்க வருகிற பொதுமக்களுக்கு பொதுவாகக் குறிப்பிட்டு அனுப்பலாம்.
|
Ø இந்தப்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட கட்டளை எதுவும் அது
பிறப்பிக்கப்பட்டதிலிருந்து இரண்டு மாதங்களுக்கு மேல் அமலில் இருத்தல் கூடாது.
|
Ø வரம்புரையாக, மனித உயிருக்கோ, ஆரோக்கியத்திற்கோ ஏற்படும் அபாயத்தைத்
தடுப்பதற்காகாகவோ, கலகம் அல்லது சச்சரவு எதையும் தடுப்பதற்காகவோ, அவ்வாறு
செய்வது அவசியமென மாநில அரசாங்கம் எண்ணுமானால், அது அறிவிப்பு மூலமாக, இந்தப்
பிரிவின்படி நடுவரால் பிறபிக்கப்பட்ட ஒரு கட்டளையானது மாநில அரசின்
கட்டளையில்லாதிருப்பின் எந்தத் தேதியில் முடிவடைந்திருக்குமோ அந்தத்
தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்கு மேற்படாது மேற்சொன்ன அறிவிப்பில் அரசு
குறிப்பிடலாகும் கால அளவுக்கு அந்தக் கட்டளை அமலில் இருக்க வேண்டுமென
உத்தரவிடலாம்.
|
Ø நடுவர் எவரும் தம்மாலோ, தமக்குக் கீழமைந்துள்ள நடுவராலோ அல்லது தமக்கு
முன்பிருந்தவராலோ பிறப்பிக்கப்பட்ட கட்டளை எதையும் முன்வந்தோ அல்லது
அக்கட்டளையால் பாதிக்கப்பட்டவரின் விண்ணப்பத்தின் பெயரில் ரத்து செய்யலாம்
அல்லது மாற்றலாம்
|
Ø மாநில அரசாங்கம், 4-வது உட்பிரிவின் வரையத்தின்படி தான் பிறப்பித்த கட்டளை
எதையும் தானே முன்வந்தோ அல்லது இந்தக் கட்டளையால் பாதிக்கப்பட்டவரின்
விண்ணப்பத்தின் பேரிலோ ரத்து செய்யலாம்.
|
Ø (5) ஆவது உட்பிரிவு அல்லது (6)-வது உட்பிரிவின்படி விண்ணப்பமொன்று
கிடைக்கப்பெற்றதும், நிலவரத்திற்கேற்ப, நடுவரோ அல்லது மாநில அரசாங்கமோ, தம்முன்
நேர்முகமாக அல்லது வாதுரைஞர் மூலமாக அந்தக் கட்டளையை எதிர்த்துக் காரணம்
சொல்வதற்கு வாய்ப்பினை விண்ணப்பதாரருக்கு அளித்தல் வேண்டும், மற்றும்
நிலவரத்திற்கேற்ப நடுவரோ அல்லது மாநில அரசோ அவ்விண்ணப்பத்தை, முழுவதுமோ ஒரு
பகுதியையோ நிராகரிப்பாரானால் அவர் அல்லது அது அவ்வாறு செய்வதற்கான காரணங்களை எழுத்து
மூலம் பதிவு செய்தல் வேண்டும்.
|
No comments:
Post a Comment