Saturday, 21 March 2020

பாரத மக்களின் சுய ஊரடங்கு

பாரத மக்களின் சுய ஊரடங்கு

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக பாரத பிரதமா் நரேந்திர மோடி அவர்கள் வலியுறுத்தியதன்படி ஞாயிற்றுக்கிழமை இன்று (மார்ச் 22) மக்களாக முன்வந்து கடைபிடிக்கும் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
கை தட்டுங்கள்
கரோனா சூழலில் தங்களது கடமையை தவறாமல் செய்யும் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவமனை ஊழியா்கள், விமானப் பணியாளா்கள், செய்தியாளா்கள் உள்ளிட்டோரின் உழைப்பை போற்றும் வகையில் ஞாயிற்றுக்கிழமை இன்று (மார்ச் 22) மாலை 5 மணியளவில் மக்கள் அனைவரும் எழுந்து நின்று கைகளைத் தட்ட வேண்டும் என்று நமது பாரத பிரதமர் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் சுய ஊரடங்கு
பாரதப் பிரதமரின் அழைப்பை ஏற்று தமிழக அரசு மக்களை சுய ஊரடங்கில் ஈடுபடுமாறு வலியுறுத்தியுள்ளது. இதற்காக பேருந்து சேவையை ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளது. கடற்கரைகள், பொழுதுபோக்கு இடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. கடைகள், உணவகங்கள் மூடப்படுகின்றன. வாடகை கார்கள், ஆட்டோக்களை இயக்குவதில்லை ஓட்டுநா்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
காவல்துறை பாதுகாப்பு
கரோனா எச்சரிக்கையை பயன்படுத்தி மாநிலத்தில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுப்பதற்கு தமிழக காவல்துறை முழு அளவில் தயார்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக, மாநிலம் முழுவதும் சனிக்கிழமை இரவு முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் மக்கள் அதிகளவில் திரளாமல் பார்த்துக் கொள்ளும்படி காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறையினருடன் இணைந்து கரோனா பரிசோதனை முகாம்களையும்,விழிப்புணா்வு நிகழ்ச்சிகளையும் நடத்துமாறு காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா். கரோனா அறிகுறியுடன் யார் இருந்தாலும், அவா்களைப் பற்றியத் தவகல்களை சுகாதாரத் துறையினருக்கு உடனடியாக தெரிவிக்கும்படி காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனாவை பயன்படுத்தி திருட்டு,வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு விழிப்புடன் இருக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் சுய ஊரடங்குக்கு தன்னார்வத்தோடு தயாராகி வருகிறது.


No comments:

Post a Comment