Wednesday 18 March 2020

நூறாண்டு வாழ நம் முன்னோர்கள் சொன்ன வழிமுறைகள்

நூறாண்டு வாழ நம் முன்னோர்கள் சொன்ன வழிமுறைகள்

அதிகாலையில் எழுங்கள்
இயற்கை உணவை உண்ணுங்கள்
முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துங்கள்
மண்பானைச் சமையலுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்
உணவை நன்கு மென்று உண்ணுங்கள்
உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்ளுங்கள்
வெள்ளை சீனியைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்
பதப்படுத்தப்பட்ட பானங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்
மலச்சிக்கல், மனச்சிக்கல் இல்லாமல் இருங்கள்.

கவலைப்படாமல், கோபப்படாமல் இருங்கள்.
பேச்சிலும், உணவிலும் நாவடக்கத்தோடு நடந்து கொள்ளுங்கள்.
படுத்தவுடன் தூங்கும் நிலையில் உடலையும், மனதையும் வைத்துக் கொள்ளுங்கள்.
குளிர் பதனப் பெட்டியில் வைத்துப் புசிப்பதைத் தவிருங்கள்.
தினமும் சில மணித் துளிகளாவது மௌனமாக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள்.
படபடப்பு, பதற்றம் இல்லாமல் நிதானமாக வாழுங்கள்.
மன்னிக்கும் மனப்பான்மையோடு இருங்கள்.
ஈகை மனப்பான்மையை கை கொள்ளுங்கள்.
வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்காரகப் பழகுங்கள்.
தூங்கி எழுந்ததும் காலை ஒரு தம்ளர் சுத்தமான தண்ணீர் பருகுங்கள்.
உணவு உண்ண வேண்டிய முறையறிந்து, பொழுதறிந்து உண்ணுங்கள்.
எதிலும் நம்பிக்கையுடன், பொறுமையுடன் இருங்கள்.
வாரத்தில் ஒருமுறை உண்ணா நோன்பு இருங்கள்.
இச்செய்தி பயனுள்ளதாக இருப்பதாகக் கருதினால் தயவுசெய்து மற்றவர்களுக்குப் பகிருங்கள்.


No comments:

Post a Comment