உடம்பு முக்கியம் பாஸ்!
பார்க்குற எல்லாரும் 'உடம்பு முக்கியம்
பாஸ்'ன்னு சொல்றப்போ உடம்புல ஏதோ முக்கியம் இருக்குறதா படுது. அதை மெய்ப்பிக்கிறதைப்
போல அண்மையில நடிகர் விஷ்ணு விஷாலின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சம்பவங்களைக் கேள்விப்பட
நேர்ந்தது. அதை உங்களோட பகிர்ந்து கொள்ளணும்னு ஒரு சின்ன ஆசை.
யார் இந்த விஷ்ணு விஷால்ன்னு கேக்குறீங்களா?
'வெண்ணிலா கபடிக் குழு' படம் ஞாபவம் இருக்குங்களா? அதுல நாயகனா நடிச்சிருப்பார்ல, அவருதாம்.
விஷ்ணு விஷால் 2017 லிருந்து ரெண்டு வருஷமா
மனச்சோர்வாலயும், மனஅழுத்தத்தாலயும் பாதிக்கப்பட்டு இருந்திருக்கிறாரு. இப்போத்தாம்
அதுலேந்து அவரு மீண்டு வந்து புது மனுஷனா ஆயிருக்காரு.
நல்லா இருந்த மனுஷன்தானப்பா அவரு. அவருக்கென்ன
மனஅழுத்தம், மனச்சோர்வுன்னா? அவரோட வாழ்க்கையில நிகழ்ந்த விவாகரத்து அவரை அப்பிடி
மாத்தியிருக்கு. அதுல அவரு மனசளவுல ரொம்ப உடைஞ்சிப் போயிட்டாரு. உடைஞ்சதோட இல்லாம
மனுஷன் போதைக்கும் அடிமையாயிருக்காரு. ஒரு கட்டத்துல அவரோட மனஅழுத்தம் அதிகமாயி படங்கள்ல
சரியா நடிக்க முடியாம பல படங்களேந்து விலகியிருக்கிறாரு. ஒரு படத்துல நடிக்கும் போது
விபத்துலயும் சிக்கியிருக்காரு. அவ்வளவுதாம் விஷ்ணு விஷால்ன்னு நெனைச்சிக்கிட்டு இருந்த
நெலையிலத்தாம் அவரு அதிலேர்ந்து மீண்டு வந்திருக்கிறாரு.
எப்பிடி அவரு மீண்டு வந்தார்ங்றதுக்கு,
உடற்பயிற்சித்தாம் அதுக்குக் காரணங்றாரு அவரு. கொஞ்சம் கொஞ்சமா உடற்பயிற்சிகள்ல கவனத்தைச்
செலுத்தி மீண்டு வந்திருக்காரு. இதைப் பத்தி அவரு என்ன சொல்றார்ன்னா, "உடம்பு
நல்லா இருந்தா போதும் பாஸ், வாழ்க்கையில எதை வேணாலும் ஃபேஸ் பண்ணிடலாம்! ஸோ, உடம்பைப்
பாத்துக்கோங்க போதும்!" அப்பிடின்னு சொல்றாரு.
அது சரி! எல்லாத்துக்கும் உடம்புதானே ஆதாரமும்,
அச்சாரமும். உடம்புக்கும் மனசுக்கும் சம்பந்தம் இருக்கு. மனசுக்கும் உசுருக்கும் சம்பந்தம்
இருக்கு. உடம்புக்கும் உசுருக்கும் சம்பந்தம் இருக்கு. அதைச் சொல்ற மாதிரி,
"உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே"ன்னு திருமூலரும் சொல்றாரு. அது மட்டுமில்லாம,
"உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்"ன்னு கூட வேற சொல்றாரு.
•••••
No comments:
Post a Comment