Pandemic என்றால் என்னவென்று
தெரியுமா?
உலகளாவிய தொற்று நோய் என்பதே Pandemic எனப்படுகிறது.
|
தற்போது கொரோனா வைரஸ் பரவலால் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இச்சொல் Pan,
demos ஆகிய இரு கிரேக்கச் சொற்களிலிருந்து உருவான சொல் ஆகும்.
|
Pan என்றால் எல்லாம்
என்றும், demos என்றால் மக்கள்
என்றும் அதாவது இரண்டும் இணைந்து எல்லா மக்களுக்கும் என்றும் பொருள்படும்.
|
எந்த ஒரு தொற்று நோயும் உலகம் முழுவதும் பரவத் தொடங்கினால், அது உலகளாவிய தொற்றுநோய்
(Pandemic) என்று அழைக்கப்படும்.
|
110-க்கும் மேற்பட்ட நாடுகளில் 1,18,000 நபருக்கு மேலானோரை கொரோனா
வைரஸ் எனப்படும் கோவிட்-19
2020 மார்ச் 11 வரையிலான காலகட்டத்தில் பாதித்ததால் இது ஓர் உலகளாவிய தொற்றுநோய் (Pandemic)
என உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
|
No comments:
Post a Comment