Wednesday, 18 March 2020

கொரோனா - சில புரிதல்கள்

கொரோனா - சில புரிதல்கள்

கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள...
  • கைகளை குறைந்தது 20 நொடிகள் கழுவ வேண்டும்.
  • கழுவும் போது உங்கள் கைகளின் அனைத்து பாகங்களுக்கும் கவனம் கொடுங்கள்.
  • சோப்பு மற்றும் நீரைக் கொண்டு நன்றாக கழுவுங்கள்.
  • பிறரது கண்கள், மூக்குகள், மற்றும் வாயை தொடுவதைத் தவிருங்கள். இவ்வழிகளில்தான் பொதுவாக கொரோனா வைரஸ் உடம்பில் பரவுவதாகக் கூறப்படுகிறது.
  • இருமினாலோ அல்லது தும்மினாலோ டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்துங்கள். அதை மறக்காமல் குப்பையில் போட்டு கை கழுவுங்கள்.
  • கைக்குட்டைகளை காட்டிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் டிஷ்யூக்களை பயன்படுத்துங்கள்.
  • கைப்பிடிகள், லிஃப்ட் பொத்தான்கள், போன்ற அதிகம் பேர் தொடும் பொத்தான்களைத் தொடுவதைத் தவிருங்கள்.
  • காய்ச்சல், இருமல், சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் இருப்பவர்களிடமிருந்து தள்ளி இருங்கள்.
  • உங்களுக்கு காய்ச்சல், இருமல், சுவாசப் பிரச்சனைகள் இருந்தால் எங்கும் போகாமல் வீட்டிலேயே இருங்கள்.

கொரோனா அறிகுறி தெரிய ஆகும் காலம்

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அது அறிகுறிகள் காட்டுவதற்கு 14 நாட்கள் எடுத்துக் கொள்ளும். அதுவரையிலும் கோரோனா தொற்றை உறுதி செய்வது என்பது தற்போதைய நிலையில் கடினமாகவே உள்ளது.
கொரோனா தொற்றின் அறிகுறிகள்

  • இந்த கொரோனா தொற்று முதன்முதலில் காய்ச்சலாக தொடங்கும்.
  • பின் வறட்டு இருமல் அதன்பின் ஒரு வாரம் கழித்து சுவாசக் கோளாறுகள் ஏற்படும். ஆனால் இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அர்த்தமில்லை. இந்த அறிகுறிகள் பிற பொதுவான வைரஸாலும் ஏற்படக்கூடியவை.
  • இந்த கோரோனா வைரஸ் தீவிரமாக இருந்தால், நிமோனியா, சிறுநீரக பழுது, தீவிர சுவாசப் பிரச்சனை, தீவிர நிலையில் உயிரிழப்பும் ஏற்படலாம்.

கொரோனா வைரஸ் குடும்பம்

  • கொரோனா வைரஸ்கள் ஒரு பெரிய வைரஸ் குடும்பத்தை சேர்ந்தவை. அது மனிதர்கள் மற்றும் விலங்குகள் மத்தியில் பல நோய்களை உருவாக்கும். மனிதர்களில் இந்த கொரோனா வைரஸ் சளி முதல் சார்ஸ் எனும் வைரஸ் உண்டாக்கும்  உண்டாக்கக்கூடியவை.
  • தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த தொற்றுக்கு கோவிட்-19 என பெயரிட்டுள்ளனர். இது விஞ்ஞானிகளால், சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் கொரோனா வைரஸ் 2 அல்லது Sars-CoV-2 என்று பெயரிடப்பட்டுள்ளது.

கோரோனா உண்டாக்கும் இறப்பு விகிதம்

கொரோனா தொற்று குறித்த அச்சம் பரவலாக இருந்தாலும், இதனால் இறப்பு ஏற்படும் விகிதம் மிகவும் குறைவு எனவும் ஒரு சதவீதத்திலிருந்து 2 சதவீதம் வரையே இறப்பு விகிதம் என பொதுவாகக் கூறப்படுகிறது. இது குறித்து உறுதியாக எதையும் கூற இயலாவிட்டாலும், உலக சுகாதார நிறுவனம் சோதனை செய்து அதில் கண்டறிந்த உண்மைகள் சில.
  •  6% பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது என்றும் அவர்களுக்கு - நுரையீரல் பழுது, செப்டிக் ஷாக் (தொற்றிலிருந்து நம்மைக் காக்க நோய் எதிர்ப்பு சக்தி ரத்தத்தில் வெளியிடும் ரசாயனம் தவறாக நமக்கு ஆபத்தை உருவாக்கும் நிலை), உறுப்புகள் செயலிழப்பு மற்றும் இறப்பு ஏற்படும் ஆபத்து ஆகியவை தென்படுகிறது.
  •  14% பேருக்கு தீவிர அறிகுறிகள் காணப்படுகின்றன. அதாவது சுவாசிப்பதில் சிரமம் மற்றும் நுரையீரலுக்குள் சரியாக காற்று செல்லாமையாக காணப்படுகிறது.
  • 80% பேருக்கு மிதமான அறிகுறிகள் - காய்ச்சல், இருமல் சிலருக்கு நிமோனியாவும் இருக்கலாம்.
  • வயதானவர்கள், ஆஸ்துமா, நீரிழிவு மற்றும் இதய நோய்கள் உள்ளவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படலாம்.



No comments:

Post a Comment