உணவுப் பொருள்கள் மூலம்
கொரோனா பரவுமா?
உணவுப் பொருள்கள் மூலமாகவும் கொரோனா பரவ வாய்ப்பு இருக்கிறது. உணவுப்
பொருளைத் தயாரிப்பவா்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், அவரின் சுவாசம்
அந்தப் பொருள்களில்பட்டு, அதன் மூலம் கொரோனா பரவலாம். எனினும் இந்த வகையில் தொற்று
பரவும் சதவீதம் குறைவாக இருப்பதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
|
காய்கறிகளை வாங்கி வந்த உடன், அதைச் சுத்தமாக கழுவிவிட வேண்டும்.
கைகளையும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.
|
பச்சைக் காய்கறிகளை நன்றாகக் கழுவிய பின்பு சாப்பிட வேண்டும்.
|
இறைச்சி மற்றும் மீன் சாப்பிடுதல், சுடுநீர் குடித்தல் தொடர்பாக
கொரோனாவைத் தொடர்புபடுத்திச் சில கருத்துகள் நிலவுகின்றன. அவை எந்த அளவுக்கு உண்மை
என்பது குறித்து மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர். அதாவது,
ü இறைச்சி, மீன், முட்டை போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிடலாம்.
அதனால், கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை. அவற்றை நன்றாக சமைத்த பிறகே உண்ண
வேண்டும்.
ü சுடுநீா் குடித்தால் தொண்டையில் தங்கியிருக்கும் கொரோனா வைரஸ்
அழிந்துவிடும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. அதனால் தொண்டையின்
கரகரப்பு வேண்டுமானால் போகலாம். ஏனென்றால் வைரஸை சுடுநீா் ஒன்றும் செய்யாது.
ü அதைப்போல கொரோனா வைரஸ் வயிற்றில் தங்காது என்பதும் உண்மை இல்லை.
வைரஸ் உடலின் எந்தப் பகுதியிலும் தங்கும்.
|
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவது கொரோனா உள்ளிட்ட
அனைத்து நோய்த் தொற்றுக்கும் பொதுவான தீா்வு. பின்வரும் பொதுவான சில வழிகளில்
நோய் எதிர்பாற்றலை அதிகரிக்கலாம். அவையாவன,
|
Ø நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கப்பதில் வைட்டமின் சி முக்கிய
பங்கு வகிப்பதால் அது சார்ந்த உணவுப் பொருள்களை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.
|
Ø ஒரு நாளின் 24 மணி நேரத்தில் 8 மணி நேரம் தூங்குவதும் உடலின்
நோய் எதிர்பாற்றலை வளர்ப்பதற்கு உதவும்.
|
Ø காய்கறிகளை உணவை அதிகம் எடுத்துக் கொள்வதன் மூலம் நோய்
எதிர்ப்பாற்றல் மேம்படும்.
|
Ø கீரை வகைகளை அடிக்கடி உணவில் சோ்த்துக்கொள்வதன் மூலமும், ஒருநாளைக்கு
2 முதல் 3 லிட்டா் தண்ணீா் குடிப்பதன் மூலமும் உடல் ஆரோக்கியத்தை நிலைநிறுத்தி
நோய் எதிர்ப்பாற்றலை பேணலாம்.
|
எப்பிடி இருப்பினும் கொரோனா என்பது கண்ணுக்குத் தெரியாத வைரஸ்
என்பதால் அதன் பரவல் குறித்து அதிக விழிப்புணர்வும், எச்சரிக்கையும் தேவையாக
இருக்கிறது. மேலும், 60 வயது முதல் 80 வயது உடையவர்களை வைரஸ் அதிகம் தாக்குவதாக
அண்மை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
|
No comments:
Post a Comment