1. அடுத்த சில நாட்கள் / வாரங்களுக்கு அத்தியாவசியமான காரணம் தவிர்த்து பிற
  காரணங்களுக்காக தயவு செய்து வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். 
 | 
 
2. இன்னும் கொரோனாவுக்கு சரியான மருந்துகள் / உபாயங்கள் கண்டுபிடிக்காத நிலையில்,
  அனைவரும் எச்சரிக்கையுடன் இருப்பது அவர்களுக்கும், அவர்களது உற்றார், உறவினர்களுக்கும்,
  மற்றவர்களுக்கும் பாதுகாப்பானதாகும். 
 | 
 
3. வெளியே செல்ல முடியாதவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், அவர்களது
  விடுப்புகளுக்காக சம்பளத்தில் பிடித்தம் செய்யாமல் இருக்குமாறு நிறுவனங்கள் / தனியார்களிடம்
  வேண்டுகோள் விடுக்கிறேன். 
 | 
 
4. அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றிக் கிடைக்கும் என்பதால், அநாவசியமாக
  பெருமளவில் பொருட்களை வாங்கிக் குவித்து விடாதீர்கள். 
 | 
 
5. கொரோனாவை எதிர்கொள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தனியார் ஆர்வலர்கள்,
  அரசு ஊழியர்கள் என்று பல்வேறு தரப்பினர் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
  அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும்வகையில் தனி நபர்களும் கொரோனாவை எதிர்கொள்ள, அரசாங்கம்
  விதிக்கிற கட்டுப்பாடுகளைக் கண்டிப்பாகக் கடைபிடிக்கவும். 
 | 
 
6. இந்த இக்கட்டான சூழலில், உறுதியும், கட்டுப்பாடும் அனைவருக்கும் மிக அவசியம். 
 | 
 
7. பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால், அதுகுறித்து ஆராய்ந்து உரிய முடிவுகளை
  எடுக்க நிதியமைச்சர் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 
 | 
 
8. 60 / 65 வயதுக்கு மேற்பட்டவர்களை எக்காரணம் கொண்டும் வீட்டை விட்டு வெளியேற
  விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளவும். 
 | 
 
9. வழக்கமான உடற் பரிசோதனைகள்/ தள்ளிப்போடத்தக்க அறுவை சிகிச்சைகள் ஆகியவற்றை
  தயவு செய்து ஒத்திப்போடவும். மருத்துவமனைகள், சுகாதார ஊழியர்கள் மீது அனாவசியமான
  அழுத்தம் தராமலிருக்க இது உதவும். 
 | 
 
10. வருகிற மார்ச் 22 ஆம் தேதி ( ஞாயிறு) காலை 07:00 மணி முதல் இரவு 09:00
  வரை பொது ஊரடங்கு (Janata Curfew) கடைபிடித்து அனைவரும் வீட்டிலேயே இருக்கவும். 
 | 
 
11. மார்ச் 22 ஆம் தேதி மாலை 5 மணிக்கு, சயரன் ஒலிக்க மாநில அரசுகள் ஏற்பாடு
  செய்யவும். சயரன் அடித்ததும் அனைவரும் அவரவர் வீட்டு வாசலில், ஜன்னலில் நின்றபடி
  5 நிமிடங்களுக்கு கரவொலி எழுப்பி கொரோனாவுக்கு எதிராகப் போராடுகிறவர்களுக்கு நன்றி
  தெரிவிக்கவும். 
 | 
 
Thursday, 19 March 2020
கொரோனா குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமரின் வேண்டுகோள்கள்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment