தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியத்தில்
பல்வேறு பணிகள்
தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியத்தில் பொறியியல், இளங்கலை,
முதுகலை, தட்டச்சு முடித்த தகுதியுடையோருக்குப் பல்வேறு அரசு பணியிடங்களுக்கான காலிப்பணியிடங்களை
நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அக்காலிபணியிட விவரங்களாவன,
|
உதவிப் பொறியாளர் காலிப் பணியிடங்கள் : 78
ஊதியம் : மாதம் ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரையில்
|
சுற்றுச்சூழல் விஞ்ஞானி காலிப் பணியிடங்கள் : 70
ஊதியம் : மாதம் ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரையில்
|
உதவியாளர் (இளநிலை உதவியாளர்) காலிப் பணியிடங்கள் : 38
ஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்
|
தட்டச்சர் காலிப் பணியிடங்கள் : 56
ஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்
|
கல்வித் தகுதி :
மேற்கண்ட பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் சிவில்,
வேதியியல், சுற்றுச்சூழல் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள், வேதியியல், உயிரியல்,
விலங்கியல், சுற்றுச்சூழல் அறிவியல், சுற்றுச்சூழல் தொழில்நுட்பம், மைக்ரோபயோலஜி,
பயோகெமிஸ்ட்ரி, தாவரவியல் உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் எம்.எஸ்சி முடித்தவர்கள்,
இளங்கலை பட்டத்துடன் கணினி தொடர்பான 6 மாத படிப்பை முடித்தவர்கள், தமிழ் மற்றும்
ஆங்கிலத்தில் தட்டச்சு பிரிவில் முதுகலை சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
|
வயது வரம்பு :
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இப்பணியிடத்திற்கு
18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
|
தேர்வு முறை :
ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின்
அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
|
விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்
கட்டணம் : ரூ.500
எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளி, விதவைகள் பிரிவினருக்குக்
கட்டணம் : ரூ.250
விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும்.
|
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnpcb.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க
வேண்டும்.
|
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப்
பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
No comments:
Post a Comment