Monday 30 March 2020

கொரோனாவால் இங்கிலாந்தை ஆளும் இந்தியர்கள்

கொரோனாவால் இங்கிலாந்தை ஆளும் இந்தியர்கள்

இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் கொரோனா நோய்த்தொற்றுக் காரணமாக தனிமையில் இருப்பதாலும், கொரோனா நோய்த் தொற்று விஷயங்களைக் கையாளும் இங்கிலாந்து நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாட் ஹான்காக்கிற்கும் கொரோனா நோய்த்தொற்றுக் காரணமாக தனிமையில் இருப்பதாலும், பிரதமருடன் இணைந்து செயல்படக்கூடிய மற்றும் வெளியே இருந்து செயல்படுகிற அதிகாரம் மிக்க அமைச்சர்களில் இருவரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் பிரீத்தி சுசீல் படேல் ஆகிய இருவருமே நெருக்கடியான இந்நிலையில் இங்கிலாந்து நாட்டிற்குத் தேவையான அவசர உத்தரவுகளை வழங்கும் பொறுப்பில் உள்ளனர்.
இதனால் இந்தியாவை ஆண்ட இங்கிலாந்தை தற்போது கோரோனாவால் இந்தியர்கள் ஆளும் நிலை உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதித் துறை அமைச்சராக இருப்பவர் ரிஷி சுனக் ஆவார். இவர் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. உள்துறை அமைச்சராக இருக்கும் பிரீத்தி சுசீல் படேல் என்பவர் இந்திய வம்சாவளியைச் சார்ந்த பெண்மணி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment