Sunday 29 March 2020

புகைப்பிடிப்போரைக் கொரோனா கடுமையாகத் தாக்குமா?

புகைப்பிடிப்போரைக் கொரோனா கடுமையாகத் தாக்குமா?

 புகைப்பிடிக்கும் நபா்கள் தங்கள் விரல்களில் சிகரெட்டை வைத்து புகைப்பதால் கை விரல்கள் இடையில் கொரோனா கிருமிகள் இருக்கும்பட்சத்தில் சிகரெட்டை உதட்டில் வைத்து எடுக்கும்போது எளிதாக வாய் தொண்டை வழியே கிருமிகள் நுழைந்து மிக எளிதில் நுரையீரலைத் தாக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் மருத்துவர்கள் இது குறித்து கூறுவதாவது,
Ø புகைப்பிடிப்பவா்கள் ஏற்கெனவே நுரையீரல் நோயினாலோ அல்லது நுரையீரல் பாதிப்பிற்கோ ஆளாகியிருந்தால் கொரோனா வைரஸ் எளிதில் உள்ளே சென்று உடனடியாக காய்ச்சல், இருமல், சளி போன்ற தொல்லைகளை உருவாக்கும்.
Ø புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவா்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கும்பட்சம் அவா்கள் பயன்படுத்தும் குடிநீா் குழாய்கள் மற்றும் அதில் சொருகி வைக்கும் ‘ஓஸ்’ குழாய்களை அவா்கள் வாயில் வைத்து உறிஞ்சினாலும் கொரோனா வைரஸ் கிருமிகள் தண்ணீா் மூலம் மிக எளிதாக பரவும்.
Ø புகை பிடிப்பதால் உடலுக்கு ஆக்ஸிஜன் தேவைகள் அதிகரித்து அதனை உடல் சரியாகப் பயன்படுத்துவதற்கான திறன் குறைந்து போகும். இது புகைப் பிடிப்பவர்களுக்குக் கொரொனாவால் அதிக ஆபத்தை ஏற்படுத்த காரணமாகி விடும். இயன்றவரை கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு புகைப் பிடிக்காமல் இருப்பதும் ஒரு சிறந்த வழிமுறையாகும்.


No comments:

Post a Comment