கொரோனா நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது தெரியுமா?
கொரோனா நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது? உயிருக்கு எவ்வாறு ஆபத்தை
ஏற்படுத்துகிறது? என்பது பற்றித் துல்லியமான விவரங்களை உலகப் புகழ்பெற்ற சுவாச
நோய்களுக்கான மருத்துவர் ஜான் வில்சன் தெரிவித்துள்ளார். அவர்
கூறியுள்ளதாவது,
|
கொரோனா பரவுவதை நான்கு நிலைகளாகக் கூறலாம்.
1. 'சப்-கிளினிக்கல்' என்று
சொல்லப்படும் வைரஸ் தொற்று இருப்பவர்கள். ஆனால், அவர்களிடம் அறிகுறிகள்
தென்படாது.
|
2.
அடுத்ததாக மேல் சுவாசக்
குழாயில் தொற்று ஏற்படுவது. தொற்று ஏற்பட்ட நபருக்கு காய்ச்சல், இருமல்,
தலைவலி அல்லது வெண்படல அழற்சி போன்ற லேசான அறிகுறிகள் இருக்கலாம்.ஆனால், குறைவான
அறிகுறிகளைக் கொண்டவர்கள்தான் மற்றவர்களைவிட அதிகமாக வைரஸைப் பரப்பும் தன்மை
கொண்டவர்கள். ஏனென்றால் அவர்களுக்குத் தொற்று ஏற்பட்டிருப்பதை அவர்களே
உணர்ந்திருக்க மாட்டார்கள்.
|
3.
மூன்றாவதாக, கொரோனா
தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் மூலமாக பரவுவது.
|
4.
நான்காவது, நிமோனியா
அறிகுறிகளுடன் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
|
வூஹானில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்,
செவிலியர்கள், 6% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புள்ளி விவரங்கள்
கூறுகின்றன.
|
வயதானவர்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தம், இதயம் மற்றும்
நுரையீரல் பிரச்னைகள் அல்லது நீரிழிவு போன்ற அடிப்படை பிரச்னைகள் உள்ளவர்களுக்கு
கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
|
Ø கொரோனா தொற்று, முதலில் இருமல் மற்றும் காய்ச்சலை
உருவாக்கி இறுதியாக சுவாசப் பாதையை அடையும். அதாவது, நுரையீரலுக்கும் வெளிப்புறத்திற்கும்
இடையில் காற்று செல்லும் பாதையில் வைரஸ் குடிபுகும்.
|
Ø இதன் காரணமாக சுவாசப் பாதையில் வீக்கம் ஏற்படுகிறது. மேலும்,
நரம்புகளிலும் பிரச்னையை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து, சிறு துகள்கள்கூட
வாய்வழியாகத் தொண்டைக்குச் செல்லும்போது இருமல் ஏற்படுத்தும்.
|
Ø இது அதிகமாகும்பட்சத்தில், வைரஸ் காற்றுப் பாதையில்
இருந்து அதன் முடிவில் உள்ள வாயு பரிமாற்ற மையத்திற்குச் செல்லும்.
இறுதியாக நுரையீரலின் அடிப்பகுதியில் உள்ள காற்றுப் பைகளுக்குச் செல்லும்.
அப்பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம், நிமோனியா அறிகுறிகள் அதிகம்
தோன்றும்.
|
Ø இதன் காரணமாக நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு, ரத்த
ஓட்டத்தில் போதுமான ஆக்ஸிஜன் இல்லாத நிலை ஏற்படும். நுரையீரலுக்குத் போதிய
ஆக்சிஜன் கிடைக்காது. இதனால் இதர உடலியக்க செயல்பாடுகள் தடைபடும்.
|
Ø வழக்கமாக நுரையீரல், காற்றில் உள்ள ஆக்சிஜன், கார்பன்-டை-
ஆக்ஸைடு ஆகிய இரண்டையும் எடுத்துக்கொண்டு, அதில் ஆக்சிஜனை மட்டும் பிரித்து
உடலின் மற்ற பகுதிகளுக்கு அனுப்பி உடல் இயக்க செயல்பாட்டுக்கு உதவுகிறது.
|
Ø கொரோனா தொற்று ஏற்பட்டவருக்கு ஆக்சிஜன் போதுமான அளவு
கிடைக்காததால் நுரையீரல் செயல்பாடு பாதிக்கிறது. உடலின் ஆக்ஸிஜனை
எடுத்துக்கொண்டு கார்பன் டை ஆக்சைடை அகற்றும் வேலையை குறைக்கிறது. இந்த
ஒருகட்டத்திற்கு செல்லும்போது தான் மரணம் ஏற்படுகிறது என்று அவர் தெரிவிக்கிறார்.
|
No comments:
Post a Comment