Thursday, 12 March 2020

கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் உயிரிழப்பு

கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் உயிரிழப்பு

            கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் உயிரிழப்பு கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது. கர்நாடகாவின் கல்புர்க்கியைச் சார்ந்து 76 வயது முதியவர் ஒருவர் சவுதி அரேபியா சென்று திரும்பிய நிலையில் அவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இதனை கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்ரீராமலு உறுதிப்படுத்தியுள்ளார்.
கனடா பிரதமரின் மனைவிக்கும் கொரோனா
            கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. உலகெங்கிலும் இருக்கும் தமிழர்களின் அபிமானத்தைப் பெற்றவர் ட்ரூடோ. அவரது மனைவி சோபி கிரிகோயர். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கனடா நாட்டு பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சோபி தனிமைப்படுத்தப்பட்டு முழுமையான மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனோ வைரஸ் தொற்றின் லேசான அறிகுறிகள் தென்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக பிரதமர் ஜஸ்டினுக்கும் கொரோனா தொற்று தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவருக்கு எவ்வித அறிகுறியும் தென்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனிமைப்படுத்தப்பட்ட போதிலும் அந்நிலையிலேயே பிரதமர் அவரது கடமைகளை வழக்கம் போல் தொடர்வதாகவும், விரைவில் கனடா மக்களுடன் உரையாற்ற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments:

Post a Comment