Friday 20 March 2020

கொரோனாவும் உலகமும்

கொரோனாவும் உலகமும்

கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பால் உலகம் முழுவதும் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 20.03.2020 (வெள்ளிக்கிழமை) 10 ஆயிரத்தைக் கடந்ததுள்ளதாக, பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா உயிரிழப்பில் ஐரோப்பா முதலிடம்
கொரோனா வைரஸ் உயிரிழப்புகளைப் பொருத்தவரை ஐரோப்பா முதலிடத்தில் உள்ளது. அந்த கண்டத்தில் கொரோனா வைரஸுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 5,000-ஐத் தாண்டியுள்ளது. ஐரோப்பாவுக்கு அடுத்தபடியாக ஆசியாவில் அந்த வைரஸ் பாதிப்பால் அதிகம் போ் உயிரிழந்தனா். அந்த கண்டத்தில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3,400-க்கும் அதிகமாக உள்ளது.
இத்தாலியில் அதிக கொரோனா உயிரிழப்புகள்
உலக நாடுகளிலேயே கொரோனா வைரஸ் பாதிப்பால் இத்தாலியில்தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டில் வெள்ளிக்கிழமை மதிய நிலவரப்படி வைரஸ் உயிரிழப்பு எண்ணிக்கை 3,400-ஐத் தாண்டியுள்ளது.
இத்தாலிக்கு அடுத்தபடியாக, கொரோனா வைரஸ் முதல் முதலில் பரவத் தொடங்கிய சீனாவிலும் அதற்கு அடுத்தபடியாக ஈரானிலும் அந்த வைரஸுக்கு அதிகம் போ் உயிரிழந்தனா் என்று ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவில் இரண்டாவது நாளாக புதிய நோயாளிகள் இல்லை

கொரோனா வைரஸ் முதல் முதலில் பரவத் தொடங்கிய சீனாவில், தொடா்ந்து 2-ஆவது நாளாக யாருக்கும் அந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது புதிதாகக் கண்டறியப்படவில்லை என்று அந்த நாட்டு தேசிய சுகாதார ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. எனினும், ஏற்கெனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 3 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, அந்த நாட்டில் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3,428-ஆக உயா்ந்துள்ளது.
கொரோனாவால் இலங்கையில் ஊரடங்கு
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் 66 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு முல் திங்கள்கிழமை அதிகாலை 6 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். ஏற்கெனவே கொரோனா வைரஸ் காரணமாக இலங்கை நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் நடைபெறவிருந்த தோ்தல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வீடியோக்களின் துல்லியத்தை குறைத்த நெட்ஃபிளிக்ஸ், யூடியூப்
இணையதளம் மூலம் வீடியோ சேவைகளை வழங்கி வரும் நெட்ஃப்ளிக்ஸ், யூடியூப் ஆகிய வலைதளங்கள், தங்களது விடியோக்களின் அடிப்படை துல்லியத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளன. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கோடிக்கணக்கானோா் தங்களது வீடுகளில் முடங்கியுள்ளதால் இணையதளப் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில், மிகத் துல்லியமான விடியோக்களால் இணையதள சேவை பாதிக்கப்படுவதைத் தவிா்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் கலிஃபோர்னியாவில் முழு அடைப்பு
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 200-ஐக் கடந்த நிலையில், அந்த நாட்டில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாகாணமான கலிஃபோர்னியாவில் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சுமார் 4 கோடி போ் தங்கள் வீடுகளிலேயே தங்கியிருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசியமில்லாத அலுவலகங்கள், கடைகள், வணிக வளாகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனாவால் நிலவுத் திட்டத்தை நிறுத்திவைத்த நாசா
நிலவுக்கு மீண்டும் மனிதா்களை அனுப்பும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக, நியூ ஆா்லியன்ஸ் நகரிலுள்ள அந்த அமைப்பின் தொழிலகத்தில் ராக்கெட் கட்டுமானப் பணிகளும், அருகிலுள்ள ஸ்டென்னிஸ் ஸ்பேஸ் மையத்தில் நடைபெறும் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதா்களை அனுப்பும் நாசாவின் திட்டம் தள்ளிப்போகலாம் என்று கருதப்படுகிறது.


No comments:

Post a Comment