Monday, 30 March 2020

கொரோனா பலி கொண்ட சிவப்பு இளவரசி

கொரோனா பலி கொண்ட சிவப்பு இளவரசி

கொரோனாவுக்கு அரச குடும்பத்தின் முதல் உயிரிழப்பாக ஸ்பெயின் இளவரசியான மரியா தெரசா உயிரிழந்துள்ளார்.
86 வயதான ஸ்பெயின் இளவரசியான மரியா தெரசா கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த அரச குடும்பத்தைச் சார்ந்த முதல் நபர் ஆவார். இவர் ஸ்பெயின் அரசரான ஆறாம் பிலிப்பின் உறவினராவார்.
ஸ்பெயின் மன்னர் ஆறாம் பிலிப்புக்கு கொரோனா பரிசோதனை செய்து முடிவில் நோய்த் தொற்று இல்லை என அறிந்த சில வாரத்திற்குப் பிறகு இளவரசி மரியா தெரசா மரணமடைந்திருக்கிறார்.
ஜூலை 28, 1933 இல் பிறந்த இளவரசி மரியா தெரசா பிரான்சில் படித்து, பாரிஸின் சோர்போனில் பேராசிரியராகவும், மாட்ரிட்டின் கம்ப்ளூடென்ஸ் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியராகவும் பணியாற்றியவர்.
தனது மாற்றுச் சிந்தனையாலும், முற்போக்கு கருத்தோட்டத்தாலும் அவர் சிவப்பு இளவரசி என்று அழைக்கப்பட்டவர். அவரது மறைவு உலகளவில் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.


No comments:

Post a Comment