Friday 27 March 2020

3 மாத EMI விலக்கின் நன்மைகள் என்னவென்று தெரியுமா?

3 மாத EMI விலக்கின் நன்மைகள் என்னவென்று தெரியுமா?

கொரேனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையால் ரிசர்வ் வங்கி EMI எனும் கடனுக்கான மாதத் தவணைத் தொகையைச் செலுத்துவதிலிருந்து 3 மாத கால அளவுக்கு விலக்கு அளித்துள்ளது. இதன் நன்மைகளாவன,
v தவணை செலுத்த வங்கிகள் அளிக்கும் 3 மாத அவகாசத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோரில் வங்கிகள் சேர்க்காது.
v 3 மாதங்களுக்கு கடன் தவணை செலுத்தாமல் விடுவதால், அதனை வாராக்கடனாகவும் சேர்க்காது.
v ரிசர்வ் வங்கி அளித்த அனுமதியை ஏற்று ஒரு வங்கி 3 மாத கால அவகாசம் வழங்கினால், வரும் ஏப்ரல் மாதம் முதல் 3 மாதங்களுக்கு கடன் தொகைக்கான தவணையை செலுத்துவதில் இருந்து வாடிக்கையாளர்கள் விடுவிக்கப்படுவார்கள். 
v ஆனால் அதே சமயம், இந்த மூன்று மாதத் தவணையை செலுத்த வேண்டும் என்று அர்த்தமாகாது. உதாரணமாக, இன்னும் ஆறு தவணைகளை ஒருவர் செலுத்த வேண்டியிருந்தால், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை அவர் தவணையைச் செலுத்த வேண்டும். அதுவே அவர் ஏப்ரல் முதல் 3 மாதம் அவகாசம் எடுத்துக் கொண்டாரேயானால், அதன்பிறகு ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை அவரது தவணையைச் செலுத்த வேண்டியது வரும். இதன் மூலம் மார்ச் மாதம் விடுமுறை அல்லது தொழில் பாதித்து வருமானம் குறைவாக இருக்கும்பட்சத்தில் வங்கிக்கடனை செலுத்த வேண்டிய அழுத்தம் பொதுமக்களுக்கு இருக்காது.
v அதே சமயம், இந்த மூன்று மாதங்களுக்கு ஒரு வேளை மக்களால் தவணையைச் செலுத்த முடியாமல் போனால், அதனால் வங்கிகளிடம் இருந்து எடுக்கப்படும் நடவடிக்கைகளில் இருந்தும், வட்டி அல்லது அபராதம் போன்றவற்றில் இருந்தும், சிபில் ஸ்கோரில் சிக்கல் ஏற்படுவதில் இருந்தும் தப்பிக்கலாம்.
v மேலும், இது கடன் தவணைகளுக்கு உட்பட, கிரெடிட் கார்டில் செலுத்த வேண்டிய தொகைக்கும் பொருந்தும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



No comments:

Post a Comment