கொரோனா மீட்பு - ரிசர்வ் வங்கியின் முக்கிய
அறிவிப்புகள்
நாடு முழுவதும் கொரோனா தொடர்பாக எழுந்துள்ள அசாதாரண நிலைமையை
எதிர்கொள்ளும் வகையில், மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் வெளியிட்ட
அறிவிப்புகளாவது,
|
ü வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதமானது 5.15 சதவீதத்திலிருந்து
4.4 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ரிவர்ஸ் ரெப்போ 4.9 சதவீதத்தில் இருந்து 4
சதவீதமாக குறைக்கப்படுகிறது.
|
ü வங்கிகளுக்கான ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டிருப்பதால் வீட்டு
கடன் வட்டி குறைய வாய்ப்புள்ளது.
|
ü வங்கிகளுக்கான ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டிருப்பதால் வீட்டுக்கடன்
வட்டி மட்டுமின்றி தொழில்துறையினர் பெற்ற கடன்களுக்கான வட்டியும் குறைய
வாய்ப்புள்ளது. வட்டி குறைப்பு காரணாக மாத தவணைகளின் எண்ணிக்கையும்
குறையக்கூடும்.
வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் 3 மாதத்திற்கு இஎம்ஐ கட்ட தேவையில்லை. எல்லா வகையான கடன்களின், தவணைகளுக்கு 3 மாதங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. விலக்கு அளிக்கப்பட்ட மாதங்களின் தவணைகளை 3 மாதம் கழித்து கட்ட வேண்டும். |
மேலும் இந்திய வங்கி முறை பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் உள்ளது.
வங்கிகள் சவாலான சூழலில் உள்ள போதிலும் தாம் நம்பிக்கையுடன் இருப்பதாக ரிசர்வ்
வங்கி ஆளுநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
|
No comments:
Post a Comment