Tuesday, 31 March 2020

கொரோனாவைக் கண்டறிய உதவும் அமேசானின் அலெக்ஸா

கொரோனாவைக் கண்டறிய உதவும் அமேசானின் அலெக்ஸா

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய அமேசானின் அலெக்சா உதவுகிறது.
அமேசான் நிறுவனம் வைரஸ் தொற்று பற்றிய உண்மைகளை வெளியிடுவதற்கான செயல்பாட்டை அலெக்சாவுக்கு வழங்கியுள்ளது.
அமேசான் அலெக்சா மூலம் காலிங், மியூசிக் போன்றவற்றை அனுபவித்திருக்கலாம். தற்போது கொரோனா நோய் தொற்றின் அறிகுறிகள், வெளியூர் சென்று வந்திருந்தால் அவற்றின் பயண வரலாறு மற்றும் வைரஸ் தொற்று பற்றிய முழு தகவல்களையும் அலெக்சாவை பயன்படுத்தி கேட்டறியலாம். கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் மக்களுக்கு உதவும் வகையில் அமேசான் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது. 
இந்த அம்சம் தற்போதுபோது அமெரிக்க பயனர்களுக்கு கிடைக்கிறது. நாம் அலெக்ஸாவிடம் கொரோனா வைரஸ் அல்லது கோவிட் 19 இருந்தால் என்ன செய்வது? என்ற கேள்வியை கேட்பதன் மூலம் voice assistant மூலம் பதிலளிக்கும். அதன் பிறகு, அதைத் தொடர்ந்து அதற்கான வழிகாட்டுதல்கள் குறித்த ஆலோசனைகளை வழங்குகிறது.
ஜப்பானிலும் தற்போது அலெக்சாவைப் பயன்படுத்தி, பாதிப்பு அளவைப் பற்றி கேட்டறியலாம். அதற்கு அலெக்சா பாதிப்பு நிலை மற்றும் அறிகுறிகளுடன் பொருந்தக்கூடிய வழிகாட்டுதல்களை வழங்குகிறது. இந்த பதில்கள் அனைத்தும், ஜப்பானிய சுகாதாரம், தொழிலாளர் மற்றும் நலத்துறை அமைச்சகம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களின் பேரில் வழங்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள அமேசான் அலெக்சா பயனர்கள் அலெக்சாவிடம் 20 விநாடிகள் ஒரு பாடலைப் பாடச் சொல்லி, அந்த நேரத்தில் அவர்கள் கைகளைக் கழுவி விட செய்யலாம். இதனால் இந்த அம்சம் குழந்தைகளை சரியாக கைகளை கழுவும் பழக்கத்தை ஊக்குவிக்கிறது.



No comments:

Post a Comment