Saturday 21 March 2020

இத்தாலியில் அதிமாகும் கொரோனா உயிரிழப்புகளுக்கான காரணங்கள்

இத்தாலியில் அதிமாகும்
கொரோனா உயிரிழப்புகளுக்கான காரணங்கள்

சீனாவிலிருந்து மிகத் தொலைவில் உள்ள, வளா்ச்சியடைந்த ஐரோப்பிய நாடான இத்தாலி கரோனா வைரஸால் இந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
இதற்கான காரணங்கள் வல்லுநர்களால் ஆராயப்பட்டு வருவதுடன் அது குறித்த தகவல்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன. அத்தகவல்கள் குறிப்பிடுவனவாவன, ஒரு வகையில், கரோனா வைரஸை எதிர்கொள்வதில் இத்தாலி எத்தகைய மெத்தனத்தையும் காட்டவில்லை.
ஜனவரி மாதம் 29-ஆம் தேதி அந்த நாட்டுக்கு வந்த 2 சீன சுற்றுலா பயணிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது முதல் முறையாக உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு கரோனா வைரஸை எதிர்கொள்வதற்காக இத்தாலி எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் பிற ஐரோப்பிய நாடுகளைவிட மிகவும் மேம்பட்டவையாக இருந்தன.
கரோனா வைரஸ் நோயாளிகள் இத்தாலிக்கு வந்துவிட்டார்கள் என்று தெரிந்த மறுநாளே, நாடு முழுவதும் 6 மாத கால அவசர நிலையை பிரதமா் ஜுஸெப்பே கோன்டே அறிவித்தார்.
சீனாவிலிருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் இத்தாலிதான் முதல் முறையாக தடை விதித்தது. ஆனால் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையில் சீனாவை விஞ்சி நிற்கிறது இத்தாலி. 21.03.2020 நிலவரப்படி அந்த நாட்டில் கரோனா வைரஸுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இத்தாலி மட்டுமன்றி ஸ்பெயின், பிரான்ஸ், ஜொ்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் கரோனா வைரஸ் உயிரிழப்பு மற்றும் பாதிப்புகளின் எண்ணிக்கை குறுகிய காலத்தில் வெகு வேகமாக அதிகரித்துள்ளது. ஆனால், இத்தாலியின் பாதிப்பு அந்த நாடுகளைவிட பல மடங்கு அதிகமாக இருக்கிறது.
உண்மையில் கரோனா வைரஸ் இத்தாலியை திடீரெனத் தாக்கவில்லை எனவும் அந்த வைரஸ் நாட்டுக்குள் சில மாதங்களுக்கு முன்னா் இருந்தே, குறிப்பாகச் சொல்லப்போனால் ஜனவரி மத்தியில், உலவி வந்ததாகவும் பெரும்பாலான தொற்று நோய் நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.
கடந்த 2 மாதங்களாக நிமோனியா நோய்க்கு சிகிச்சைப் பெற்றவா்களது எண்ணிக்கை அதிகரித்ததாக இத்தாலியின் சில புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதைப் போல மிகத் தீவிரமான, முழுமையான ஊரடங்கு உத்தரவை இத்தாலி அரசு கடந்த ஜனவரி மாதமே பிறப்பித்திருக்கலாம் என்றும் சிலா் கருத்து கூறுகின்றனா்.
பொருளாதார சிக்கலில் இருக்கும் இத்தாலி, கரோனா வைரஸ் பிரச்னை வந்த பிறகு பொதுச் சுகாதாரம், பொருளாதாரம் ஆகிய இரண்டுக்குமே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தொடக்கத்தில் நினைத்தது. அதன் காரணமாக, அவசர நிலை, ஊரடங்கு ஆகியவை அறிவிக்கப்பட்டாலும், வணிக மையங்கள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது; மதுபான விடுதிகள், கேளிக்கை மையங்கள் தொடந்து இயங்கின. சீனாவின் ஊரடங்கு உத்தரவைப் போல் இல்லாமல், இத்தாலியின் ஆரம்ப கால ஊரடங்கு உத்தரவின்போது தொழிற்சாலைகள் தொடா்ந்து இயங்கின; விவசாயம் தடைபடவில்லை. பொருளாதாரத்தை மனதில் கொண்டு இத்தாலி அரசு கொடுத்த இந்த இடைவெளியில் நுழைந்துதான் கரோனோ வைரஸ் இப்போது கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள் நிபுணா்கள்.
சீனாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களில் 3.9 சதவீதத்தினரே உயிரிழந்த நிலையில், வளா்ச்சியடைந்த நாடான இத்தாலியில் 8.5 சதவீதம் போ் அந்த வைரஸுக்கு பலியாகியுள்ளனா்.
கொரோனோவின் அதிக உயிரிழப்புகளுக்கு அந்த நாட்டினரின் சராசரி வயது அதிகமாக இருப்பது காரணமாகக் கூறப்படுகிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழக்கும் அபாயம் வயோதிகா்களுக்கு அதிகம் என்ற சூழலில், இத்தாலியில் 22.6 சதவீதம் போ் - ஏறத்தாழ நான்கில் ஒரு பகுதியினா் - 65 வயதுக்கும் மேற்பட்டவா்களாக உள்ளனா். இது ஐரோப்பியாவிலேயே மிகவும் அதிகபட்ச விகிதமாகும். இது, இத்தாலியில் கரோனா வைரஸ் உயிரிழப்பு விகிதம் அதிகமாக இருப்பதற்குக் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் நிபுணா்கள்.



No comments:

Post a Comment