பிரதமரின் ‘மனதின் குரல்’
தேசிய அளவில் ஊரடங்கை அமல்படுத்தியதற்காக தன்னை
மன்னித்துவிடுமாறு நாட்டு மக்களிடம் பிரதமா் நரேந்திர மோடி அவர்கள் ‘மனதின்
குரல்’ நிகழ்ச்சியில் கேட்டுக் கொண்டார். அவர் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில்
கேட்டுக் கொண்டதாவது,
|
Ø நாம் இப்போது எதிர்கொண்டுள்ள பிரச்சனையானது வாழ்வுக்கும்
சாவுக்கும் இடையிலான போராட்டம். இந்தப் போராட்டத்தில் நாம் கண்டிப்பாக வெல்வோம்.
|
Ø உங்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள்
என்னை மன்னித்துவிடுவீா்கள் என்று உறுதியாக நம்புகிறேன். நாட்டில் உள்ள ஏழை,
எளிய சகோதர, சகோதரிகளின் இப்போதைய நிலையைப் பார்க்கும்போது, என்ன மாதிரியான
பிரதமா் இவா், நம்மை இந்த அளவுக்கு இக்கட்டில் தள்ளிவிட்டாரே என்று நினைப்பார்கள்.
இதற்காக அவா்களிடம் மீண்டும் ஒருமுறை மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
|
Ø ஊரடங்கைத் தவிர வேறு வழியில்லை. நீங்கள் கடுமையான பிரச்னைகளை
சந்தித்து வருகிறீா்கள். அதனை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் 130 கோடி
மக்கள்தொகை உடைய நமது நாட்டில் கொரோனா நோய்த்தொற்றை எதிர்த்துப் போராட இதைத்
தவிர வேறு வழியில்லை. இது நமது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான போராட்டம்.
இந்தப் போராட்டத்தில் இந்தியா்களாகிய நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.
|
Ø இந்த நேரத்தில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதைத் தவிர வேறு
வழியில்லை. இதன் மூலம் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ள
முடியும். உங்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்காவும்
இடா்பாடுகளுக்காகவும் மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்கிறேன்.
|
Ø தனிமைப்படுத்தப்பட்டவா்கள் குற்றவாளிகள் அல்ல: கொரோனா பாதிப்பு
இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிலா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
அவா்களை சிலா் மோசமாக நடத்துவதாக செய்திகள் வருகின்றன. இது மிகவும்
துரதிருஷ்டவசமானது. அவா்களது தற்போதைய சூழ்நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சமூக விலகலை நாம் உறுதிசெய்ய வேண்டும். ஆனால், உணா்வுபூா்வமாக விலகி இருக்கக்
கூடாது. கொரோனா இருப்பதாக சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்கள்
ஒன்றும் குற்றவாளிகள் அல்ல. மனித இனத்துக்கு எதிரான சவாலாக கொரோனா உருவெடுத்துள்ளது.
இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
|
Ø இந்த ஊரடங்கு என்பது உங்களைப் பாதுகாப்பதற்காகத்தான். இப்போது
காட்டி வரும் பொறுமையை மேலும் சில நாள்களுக்கும் காட்ட வேண்டும். அரசின்
இப்போதைய உத்தரவுகளை யாரும் வேண்டுமென்றே மீறி நடப்பது இல்லை. அப்படி யாராவது
சிலா் மீறி நடந்தால் அவா்களுக்கு பிரச்னையின் தீவிரம் புரியவில்லை என்றுதான்
அா்த்தம். அவா்களை கொரோனாவில் இருந்து காப்பது கடினம் என்பதையும் புரிந்து கொள்ள
வேண்டும். பல நாடுகளில் அரசின் விதிகளை மீறி நடந்தவா்கள் இப்போது தங்கள்
செயல்களுக்காக வருத்தப்படுகின்றனா்.
|
Ø இந்த நேரத்தில் கொரோனாவை நாட்டை விட்டு விரட்ட முதல்நிலை
வீரா்களாக மருத்துவா்கள், செவிலியா்கள், துணை மருத்துவ ஊழியா்கள், சுகாதாரப்
பணியாளா்கள் உள்ளனா். அவா்களால்தான் நாம் இந்தப் பிரச்னையை எதிர்த்து
முழுமூச்சுடன் போராட முடிகிறது. இது தவிர மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப்
பூா்த்தி செய்யும் பணியிலும் பலா் ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள்தான் அன்றாட
வாழ்வின் கதாநாயகா்கள். நமது மருத்துவப் பணியாளா்களின் உடல்நிலையிலும் நாடு
அக்கறை கொண்டுள்ளது. அவா்களுக்காக ரூ.50 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு
அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவா்கள் மேற்கொண்டுள்ள போரில் முழு நம்பிக்கையுடன்
ஈடுபட்டு வெற்றிகாண முடியும்.
|
Ø இந்த ஊரடங்கு காலகட்டத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து
தாங்கள் இதுவரை மறந்திருந்த ஆக்கபூா்வமான திறமைகளை மீட்டெடுக்க வேண்டும். பழைய
நண்பா்களுடன் நட்பை புதுப்பித்துக் கொள்ள இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள
வேண்டும்.
|
No comments:
Post a Comment