Tuesday, 24 March 2020

எவ்விகட்டணமும் இன்றி எந்த ATM லும் பணம் எடுக்கலாம்!

கட்டணம் இன்றி எந்த ATM லும் பணம் எடுக்கலாம்!

கொரோனாவால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால், வரக்கூடிய மூன்று மாதங்களுக்கு எந்த வங்கியின் ஏடிஎம்களிலும் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மேலும், 2018-19ஆம் நிதியாண்டுக்கான வருமான வரித் தாக்கல் செய்ய ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 
அத்துடன் ஆதார் - பான் எண் இணைப்புக்கு மார்ச் 31 ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுகிறது.
வங்கி சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைக்க வேண்டும் என்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
மார்ச், ஏப்ரல், மே மாதத்துக்கான ஜிஎஸ்டியை தாக்கல் செய்ய ஜூன் 30 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment