Wednesday, 13 May 2026

நாம் ஒன்றுபட்டால்... மனிதாபிமானத்தின் 20 சிகரங்கள்!

நாம் ஒன்றுபட்டால்... மனிதாபிமானத்தின் 20 சிகரங்கள்!

உலகம் எப்போதுமே பிரிந்து கிடப்பதாக நாம் நினைக்கிறோம். ஆனால், ஆபத்து வரும்போதோ அல்லது ஒரு லட்சியம் பிறக்கும்போதோ இந்த நீல நிறக் கோள் ஒரே குடும்பமாக மாறிவிடுகிறது. மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை என்பதற்கு இதோ 20 சாட்சிகள்:

1. எத்தியோப்பியாவின் பச்சை அதிசயம் (2019)

ஒரே நாளில் 35 கோடி மரக்கன்றுகள்! பள்ளி குழந்தைகள் முதல் அரசாங்க அதிகாரிகள் வரை கைகோர்த்து நட்டார்கள். காடு வளர்ப்பில் இது ஒரு உலகளாவிய மாடல்.

2. தாய்லாந்து குகை மீட்பு (2018)

வெள்ளம் சூழ்ந்த குகைக்குள் சிக்கிய 12 சிறுவர்கள். 17 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், டைவர்ஸ், ராணுவம் என ஒரு மினி உலகமே அங்கே திரண்டது. 18 நாள் போராட்டத்திற்குப் பிறகு இம்பாசிபிள் சாத்தியமானது.

3. 9/11 போட் லிஃப்ட் (2001)

நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலின் போது, வெறும் 9 மணி நேரத்தில், 150 படகுகள் மூலம் 5 லட்சம் மக்கள் மன்ஹாட்டனில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதுதான் வரலாற்றின் மிகப்பெரிய கடல்வழி மீட்பு.

4. சர்வதேச விண்வெளி நிலையம் (ISS)

1998 முதல் பூமியில் இருந்து 250 மைல் உயரத்தில் 19 நாட்டு விண்வெளி வீரர்கள் ஒன்றாக வசிக்கிறார்கள். மேலிருந்து பார்க்கும்போது நாடுகளுக்கு இடையேயான எல்லைக் கோடுகள் தெரிவதில்லை.

5. சுனாமி உதவி (2004)

இந்தியா முதல் இந்தோனேசியா வரை ஆழிப்பேரலை தாக்கியபோது, 28 நாடுகள் ஓடி வந்தன. 14 பில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டது. இதுதான் உலக வரலாற்றின் மிகப்பெரிய மனிதாபிமான உதவி.

6. மாண்ட்ரீல் புரோட்டோகால் (1987)

ஓசோன் ஓட்டையை அடைக்க உலக நாடுகள் அனைத்தும் முதன்முதலில் ஒன்று சேர்ந்து கையெழுத்திட்ட ஒப்பந்தம்.

7. பசிபிக் குப்பை சுத்தம் (2018)

கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற 17 நாடுகள் கைகோர்த்தன. இதுவரை 1,00,000 கிலோ பிளாஸ்டிக் அவுட்!

8. ஹ்யூமன் ஜீனோம் ப்ராஜெக்ட் (2003)

மனித மரபணு வரைபடத்தை உருவாக்க 6 நாட்டு விஞ்ஞானிகள் 13 வருடங்கள் உழைத்தார்கள். நவீன மருத்துவத்தின் அஸ்திவாரம் இது.

9. லைவ் எய்ட் கச்சேரி (1985)

எத்தியோப்பியப் பஞ்சத்திற்காக 1.9 பில்லியன் மக்கள் டிவியில் பார்த்த இசை நிகழ்ச்சி. 127 மில்லியன் டாலர் நிதி திரண்டது.

10. அண்டார்டிகா ஒப்பந்தம் (1959)

இந்தக் கண்டம் அறிவியலுக்கு மட்டுமே, என்று 54 நாடுகள் அண்டார்டிகாவை அமைதிப் பிரதேசமாகப் பாதுகாக்கின்றன.

11. நேபாள நிலநடுக்கம் (2015)

34 நாடுகளைச் சேர்ந்த 134 மீட்புக் குழுக்கள் களமிறங்கின.

12. இந்தியாவின் மரக்கன்று சாதனை (2016)

உத்திரப்பிரதேசத்தில் 8 லட்சம் பேர் சேர்ந்து 24 மணி நேரத்தில் 5 கோடி மரங்கள் நட்டனர்.

13. சிலி சுரங்க மீட்பு (2010)

2,300 அடி ஆழத்தில் சிக்கியிருந்த 33 தொழிலாளர்களை நாசா மற்றும் பல நாடுகள் சேர்ந்து மீட்டன.

14. ஹைட்டி நிலநடுக்கம் (2010)

140 நாடுகள் உதவிக்கரம் நீட்டின. மக்கள் 13 பில்லியன் டாலர் தானம் செய்தனர்.

15. டீம் ட்ரீஸ் (2019)

யூடியூபர்கள் ஆரம்பித்த இந்தத் திட்டத்தில் 200 நாட்டு மக்கள் சேர்ந்து 2 கோடி மரங்கள் நட நிதி கொடுத்தனர்.

16. கோவிட் வேக்சின் (2020)

10 வருடம் ஆகும் வேலையை 1 வருடத்திற்குள் உலக விஞ்ஞானிகள் ஒன்று சேர்ந்து முடித்தனர்.

17. கொரிய ஒலிம்பிக் அணி (2018)

வட மற்றும் தென் கொரியா ஒரே கொடியின் கீழ் அணிவகுத்தது அரசியல் எல்லைகளைத் தாண்டியது.

18. திமிங்கில மீட்பு (2019)

ஜார்ஜியா கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கிலங்களைக் காப்பாற்றச் சாதாரண மக்கள் தண்ணீருக்குள் குதித்து போராடினர்.

19. அமேசான் காப்பீடு (2019)

7 தென் அமெரிக்க நாடுகள் சேர்ந்து அமேசான் காடுகளைப் பாதுகாக்க ஒப்பந்தம் செய்தன.

20. ஆஸ்திரேலிய காட்டுத்தீ உதவி

அமெரிக்கா, நியூசிலாந்து தீயணைப்பு வீரர்கள் கடல் கடந்து வந்து உதவினர்.

இரு ஒரு பக்கம் மெகா புராஜெக்ட் என்றால், இன்னொரு பக்கம், தலைமுறைகளுக்கு இடையே ஒரு பாலம் கட்டப்படுகிறது. மாணவர்கள் முதியவர்களின் வாழ்க்கைச் சரிதையை எழுத உதவுகிறார்கள். பதில் மரியாதையாக, முதியவர்கள் தங்கள் வாழ்க்கைப் பாடங்களை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள். பாடப்புத்தகத்தில் கிடைக்காத லைப் லெசன்ஸ் இங்கேதான் கிடைக்கிறது.

அடுத்தது ஜெனரேஷன் கனெக்ட். ஸ்மார்ட்போனில் செட்டிங்ஸ் மாற்றுவது முதல் ஆன்லைன் கேம்ஸ் வரை மாணவர்களிடம் பாட்டிகள் டியூஷன் எடுக்கிறார்கள். இது வெறும் டெக்னாலஜி ஹெல்ப் இல்லை; தனிமையில் வாடும் முதியவர்களுக்குக் கிடைக்கும் ஒரு எமோஷனல் சப்போர்ட்.

பிரிவினைகள் என்பது செயற்கை. ஒற்றுமை என்பது இயற்கை. நாம் தனித்தனியாக இருக்கும்போது ஒரு துளி, ஒன்று சேரும்போது ஒரு கடல்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமையே வலிமை – இவையெல்லாம் சாதாரண பழமொழிகளா என்ன? மனிதகுலத்துக்கான மகத்தான வாசகங்கள்.

*****

No comments:

Post a Comment