ஸ்லோ லிவ்விங்
மெதுவாக இயங்குதல் நிதானம் மற்றும்
உங்களுக்கான வாழ்க்கை!
கொரோனா
லாக்டவுன் காலம் நமக்கு ஒரு பெரிய பாஸ் பட்டனை அழுத்தியது. அலுவலக ஓட்டம், அட்ரினலின்
ரஷ், டிராபிக் ஜாம் என எல்லாம் திடீரென்று நின்றன. அப்போதுதான் பலருக்கு உறைத்தது,
நாம் ஓடிக்கொண்டிருந்தது இலக்கை நோக்கி அல்ல, நம்மையே நாம் திசைதிருப்பிக் கொள்ள என்று!
இன்றைய
உளவியல் ஆய்வுகள் ஓர் உண்மையைப் புட்டு வைக்கின்றன. வெறும் ஒரு மணி நேரம் இயற்கையோடு
செலவழித்தால், உங்கள் கவனிப்புத் திறன் இருபது சதவீதம் அதிகரிக்கிறதாம்.
கவனியுங்கள்,
இது உங்கள் போனில் வரும் பேட்டரி பூஸ்ட் அல்ல, உங்கள் மூளைக்கான பூஸ்ட்.
கூகுள்
சொல்கிறது, ஸ்லோ லிவ்விங் என்ற தலைப்பில் வீடியோக்களைத் தேடியவர்கள் எண்ணிக்கை எக்ஸ்போனென்ஷியல்
ஆக உயர்ந்ததாம். இன்ஸ்டாகிராமில் 50 லட்சம் ஹேஷ்டேக்குகள், டிக் டாக்கில் 100 கோடி
வியூஸ்கள்.
லாக்டவுன்
விலகிய பிறகும் சில மாற்றங்கள் பெர்மனன்ட் ஆகிவிட்டன.
ஆபீஸ்
போகாமல் வேலை செய்வது இப்போது ஒரு தத்துவமாகவே மாறிவிட்டது.
ஹோம்வொர்க்,
எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டி என்று குழந்தைகளை ரேஸ் குதிரை ஆக்குவது கொஞ்சம் குறைந்திருக்கிறது.
அவர்களுக்கு வெட்டியாக இருக்க நேரம் தேவைப்படுகிறது. அப்போதுதான் கிரியேட்டிவிட்டி
பிறக்கும்.
ஆச்சரியமாக,
கார்ப்பரேட் பாஸ்களும் இப்போது மெதுவாகப் போவதை ரசிக்கிறார்கள். கொஞ்சம் பிரேக் எடுத்தால்
ப்ரொடக்டிவிட்டி கூடுகிறது என்று அவர்களுக்குப் புரிந்துவிட்டது.
நமது
ஸ்மார்ட்போன்கள் இடைவிடாத நோட்டிபிகேஷன்கள், தரம் குறைந்த தகவல்கள், நிமிடத்திற்கு
ஒரு பிரேக்கிங் நியூஸ் என்று நம்மை எப்போதும் ஆன்
மோடிலேயே வைத்திருக்க முயல்கின்றன.
இதற்குப்
போட்டியாக இப்போது ஸ்லோ ஜர்னலிசம் வந்திருக்கிறது. இப்போது சில பத்திரிகைகள் செய்தியின் வேகத்தை விட, அதன் பின்னணி
மற்றும் துல்லியத்திற்கு முக்கியத்துவம் தருகின்றன.
ஸ்லோ டிவி, ஸ்லோ ரீடிங் என ஒரு புதிய அலையே கிளம்பியிருக்கிறது.
தொழில்நுட்பம்
வளர வளர, நாம் அதன் அடிமையாகாமல் இருக்க விழிப்புணர்வு அவசியம். நம் போன் வைப்ரேட் ஆகும்போதெல்லாம் நம்
நரம்புகளும் துடிக்க வேண்டிய அவசியமில்லை.
செய்திகளைச்
சுடச்சுடச் சாப்பிடுவதை விட, கொஞ்சம் ஆறிப்போனாலும் தரமாகச் சாப்பிடுவது உடலுக்கும்
மூளைக்கும் நல்லது. அந்த வேகக் கலாச்சாரத்தில் இருந்து தப்பிக்க வேண்டிய பொறுப்பு நுகர்வோராகிய
நம்மிடம்தான் இருக்கிறது.
வேகமாக
ஓடி ஓடி ரத்த அழுத்தம், மன உளைச்சல், இதய பாதிப்பு, நரம்பு கோளாறு, பக்கவாதம் என்று
பக்க விளைவுகளுக்கு ஆட்பட்டது போதும்.
கொஞ்சம்
மெதுவாக நடப்போமே. உலகம் ஒன்றும் ஓடிவிடப் போவதில்லை!
கொஞ்சம்
உங்கள் வாழ்க்கையை மெதுவாக மாற்றுங்கள். உங்கள் உடல்நலமும் மனநலமும் மெதுமெதுவாக மேம்படுவதை
நீங்களே பார்ப்பீர்கள்.
*****

No comments:
Post a Comment