மூளைக்கு ஒரு முட்டுச்சந்து – உங்கள்
மைண்ட்புல் மறைவிடம்!
நம்
வீட்டில் சமைக்க கிச்சன் இருக்கிறது, தூங்க பெட்ரூம் இருக்கிறது. ஆனால், நமக்கு நாமே
இருக்க ஓர் இடம் இருக்கிறதா? பொதுவாகக் கிடையாது. போன் அடிக்காத, வாட்ஸ்அப் எட்டிப்பார்க்காத,
துணி துவைக்கச் சொல்லாத ஒரு சின்ன ஐலண்ட் உங்களுக்குத் தேவை. அதைத்தான் மைண்ட்புல்னஸ்
ஹைட்அவுட் என்கிறார்கள்.
அந்த
இடத்தை எங்கே பிடிப்பது என்கிறீர்களா?
வீட்டில்
ஒரு மூலையில் உபயோகமில்லாமல் ஓர் இடம் இருக்குமே டெட் ஸ்பேஸ். அதைத் தேர்ந்தெடுங்கள்.
ஆனால், அதைத் ஒளித்து வைக்காதீர்கள். அது உங்கள் கண்ணில் படும்படியே இருக்கட்டும்.
ஏய், இங்கே வந்து கொஞ்சம் உட்கார்ந்து உன்னை கவனி, என்று அந்த இடம் உங்களை அழைக்க வேண்டும்.
முக்கியமான
விஷயம், அங்கே கரண்ட் பில் கட்ட வேண்டிய பேப்பர்களையோ, துவைக்க வேண்டிய துணிகளையோ குவித்து
வைக்காதீர்கள். அது ஒரு புனிதமான சர்க்யூட்.
ஏன்
இந்த ரகசியத் தளம் என்கிறீர்களா?
இந்த
இடத்திற்கு நீங்கள் போய் உட்கார்ந்தாலே, வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு ஒரு சிக்னல்,
அதாவது, இப்போது இவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்.
அந்த
இடத்திற்குள் நுழையும்போது போனைச் சைலண்டில் போட்டு தூர எறியுங்கள்.
உங்கள்
உடலும் மனமும் அந்த இடத்தோடு ஒரு சிங்க் ஆகிவிடும். அங்கே உட்கார்ந்தாலே மூளை தானாகவே
ரிலாக்ஸ் மோடுக்குத் தாவி விடும்.
அங்கே
என்ன செய்ய வேண்டும்? எதாவது டாஸ்க். அவசியமில்லை. உங்களுக்கு எது பிடிக்குமோ அதைச்
செய்யுங்கள்.
அந்த
இடம் கண்ணை உறுத்தாத மென்மையான நிறங்கள் கொண்டதாக இருக்கட்டும்.
ஒரு
வேளை அந்த இடம் திறந்த வெளியாக இருந்தால், அங்கே கொஞ்சம் பச்சை பசேல் எனச் செடிகளை
வையுங்கள். அவை காற்றைச் சுத்திகரிப்பதோடு, அவற்றுக்குத் தண்ணீர் ஊற்றுவதே ஒரு மைண்ட்புல்
வேலைதான்.
அது
ஓர் அறையாக இருந்தால், ஜன்னலைத் திறந்து வையுங்கள். சூரிய வெளிச்சமும், தென்றலும் உங்கள்
சருமத்தில் படுவது ஒரு தனி உணர்வு.
அங்கே
டிசைன் அவார்டு வாங்குவது நம் நோக்கமல்ல. நமக்குத் தேவை சௌகரியம்.
அந்த
இடத்தின் தரை கடினமாக இருந்தால் கவனம் சிதறும். ஒரு நல்ல யோகா மேட் அல்லது குஷன் போடுங்கள்.
திறந்தவெளி புல்வெளி என்றால் எதுவும் தேவையில்லை.
உங்களுக்கு
டைரி எழுதும் பழக்கம் இருந்தால், அங்கே ஒரு பேனாவையும் நோட்டையும் வையுங்கள். பாதியில்
மை தீர்ந்து போகாத நல்ல பேனாவாக இருக்கட்டும்!
உங்களுக்கு
இசைப்பது பிடிக்கும் என்றால், அங்கே உங்களுக்குப் பிடித்தமான இசைக்கருவிகளை வையுங்கள்.
எடுத்து வாசியுங்கள்.
உங்களுக்கு
வாசிப்பது பிடிக்கும் என்றால் அங்கே புத்தகங்கள் இருக்கட்டும்.
உங்களுக்கு
அலங்காரம் செய்வது பிடிக்கும் என்றால் அதற்கான பொருட்கள் அங்கே இருக்கட்டும்.
உங்களுக்கு
ஓவியம் தீட்டுவது பிடிக்கும் என்றால் உங்கள் ஓவிய அறை அதுதான்.
உங்களுக்குப்
பிரார்த்திப்பது பிடிக்கும் என்றால் உங்கள் பிரார்த்தனை அறையாகக் கூட அது இருக்கலாம்.
வெறுமனே
வானத்தைப் பார்த்துக் கொண்டு இருப்பது உங்களுக்குப் பிடிக்கும் என்றால், உங்கள் தோட்டத்தின்
ஓரிடத்தில் அமைக்கப்பட்ட ஓர் இருக்கையாகக் கூட அது இருக்கலாம்.
இப்படித்தான்
உங்களுக்கான ஸ்பேஸை உங்கள் வீட்டில் நீங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
இந்த
இடத்தை அமைப்பது மட்டும் போதாது. அதை அடிக்கடி விசிட் செய்ய வேண்டும். அங்கே போகப்
போக உங்களை அறியாமலேயே, உங்கள் மூளைக்கு, இதோ ரிலாக்ஸ் ஆகப்போகிறோம் என்கிற கட்டளையை
உங்கள் உணர்வுகள் அனுப்பும்.
வாழ்க்கை
என்பது ஒரு முடிவில்லாத லூப்.அதிலிருந்து தப்பிக்க ஒரு சின்ன எக்ஸிட் கேட் தேவை. உங்கள்
வீட்டு மூலையில் அந்த கேட்டை இன்றே உருவாக்குங்கள்!
*****

No comments:
Post a Comment