மூளைக்கு ஒரு ஜம்பிங் ஜாக்ஸ் –
விடுகதைகளும் குட்டிச் சந்தோஷங்களும்!
வாழ்க்கை
என்பது வெறும் இஎம்ஐ கட்டுவதும், வாட்ஸ்அப் பார்ப்பதும் மட்டுமல்ல. எப்போதாவது ஒரு
விடுகதைக்கு விடை கண்டுபிடிக்கும்போது மண்டைக்குள் ஒரு பல்ப எரியுமே, அந்த யுரேகா தருணம்தான்
மனுஷனை இன்னும் மனுஷனாக வைத்திருக்கிறது.
பண்டைய
எகிப்திய பிரமிடு சுவர்களில் செதுக்கப்பட்ட விடுகதைகள் முதல், இன்று ஆபீஸ் குரூப்பில்
வரும் மொக்கை ஜோக்குகள் வரை பார்க்கும் போது மனிதன் எப்போதும் புதிர் பிரியன்தான்.
விடுகதைகள்
மூளையைச் சுறுசுறுப்பாகத் தூண்டுகின்றன.
விடுகதைகளை
அணுகுவது எப்படி? அதற்கு சில புரொபஷனல் டிப்ஸ் இருக்கின்றன.
ஒவ்வொரு
வார்த்தையிலும் ஒரு க்ளூ ஒளிந்திருக்கும். அதைக் கவனிக்க வேண்டியது முக்கியம்.
சில
விஷயங்கள் குறியீடுகளாக இருக்கும். சைடு ஆங்கிளில் யோசித்துப் பார்ப்பது அவசியம்.
கண்ணால்
படிப்பதை விட, காதால் கேட்கும்போது மூளையின் லாஜிக் செல்கள் சீக்கிரம் வேலை செய்யும்.
அதையும் முயற்சித்துப் பார்க்க வேண்டும்.
சில
சமயம் விடை மிக எளிமையாக இருக்கும். நாம் தான் அதை குவாண்டம் பிசிக்ஸ் ரேஞ்சுக்கு யோசித்துக்
குழப்புவோம். ஆக, இதிலும் கவனமாக இருக்க வேண்டும்.
இதை
இப்போது டெஸ்ட் செய்து பார்த்து விடுவோம். கீழே பத்து விடுகதைகள் இருக்கின்றன. மேற்படி
புரொபஷனல் டிப்ஸ்களைப் பயன்படுத்தி முயற்சி செய்யுங்கள்.
1. என்னிடம் நகரங்கள் உண்டு, வீடுகள் இல்லை.
மலைகள் உண்டு, மரங்கள் இல்லை. நீர் உண்டு, மீன் இல்லை.சாலைகள் உண்டு, கார்கள் இல்லை.
நான் யார்?
2. என்னிடம் சாவிகள் உண்டு, பூட்டுகள் இல்லை.
ஸ்பேஸ் உண்டு, அறைகள் இல்லை. நீங்கள் என்டர் செய்யலாம், ஆனால் உள்ளே நுழைய முடியாது.
நான் யார்?
3. என்னிடமிருந்து எவ்வளவு அதிகமாக எடுக்கிறாயோ,
அவ்வளவு பெரியவனாக நான் வளர்வேன். நான் யார்?
4. துடைக்கும்போது நனைவது எது?
5. கால்கள் உண்டு, ஆனால் நடக்க முடியாது. அது
என்ன?
6. இளமையில் உயரமாக இருப்பேன், முதுமையில் குட்டையாவேன்.
நான் யார்?
7. எனக்கு உயிர் இல்லை, ஆனால் வளர்வேன். நுரையீரல்கள்
இல்லை, ஆனால் காற்று வேண்டும். வாய் இல்லை, ஆனால் தண்ணீர் பட்டால் செத்து விடுவேன்.
நான் யார்?
8. விடிந்தால் தெரியாது, கருத்தாலும் மறையாதது.
அது எது?
9. இதைச் செய்பவர் விற்பார். வாங்குபவர் பயன்படுத்த
மாட்டார். பயன்படுத்துபவருக்குத் தான் அதைப் பயன்படுத்துகிறோம் என்பதே தெரியாது. அது
என்ன?
10. நேராக இருந்தால் கனக்கும், பின்னோக்கிச் சென்றால்
கனக்காது. நான் யார்?
விடைகளைக்
கண்டுபிடித்திருப்பீர்கள். செக் செய்து கொள்ள கீழே இணைப்பை ஒரு கிளிக் செய்யுங்கள்.
*****

No comments:
Post a Comment