Sunday, 3 May 2026

சோலார் மாமாக்களும் இருட்டை விரட்டும் பாட்டிகளும்!

சோலார் மாமாக்களும் இருட்டை விரட்டும் பாட்டிகளும்!

கிராமப்புறங்களில் கரண்ட் போனால் நாம் இன்வெர்ட்டரைத் தேடுகிறோம். ஆனால், உலகெங்கும் 700 மில்லியன் பேருக்கு இன்னும் ஸ்விட்ச் என்பது வெறும் பிளாஸ்டிக் துண்டுதான். அழுத்தினாலும் விளக்கு எரியாது. இந்த இருட்டுப் பக்கத்தில்தான் ஒரு அமைதியான புரட்சி நடக்கிறது.

நடத்துவது யார்? கோட் சூட் போட்ட இன்ஜினியர்கள் அல்ல, படிக்காத, கிராமத்துத் தாய்மார்களும் பாட்டிகளும்தான். இவர்களை அன்போடு சோலார் மாமாக்கள் என்று அழைக்கிறார்கள்.

ஆப்பிரிக்காவின் ஜான்சிபார் தீவில் மட்டும் 65 பெண்கள் சோலார் இன்ஜினியர்களாக மாறியிருக்கிறார்கள். ரிசல்ட்? 29 கிராமங்களில் உள்ள 1,900 வீடுகளில் இன்று விளக்கு எரிகிறது.

இதே கதைதான் மத்திய அமெரிக்காவின் பெலிஸ் நாட்டிலும். பழங்குடியினப் பெண்கள் வெறும் சோலார் பேனல்களை மாட்டுவதோடு நிறுத்திக்கொள்வதில்லை. அதில் வரும் ரிப்பேர்களைச் சரி செய்கிறார்கள், மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதுவரை உலகம் முழுக்க 1,75,000 சோலார் சிஸ்டம்களை இந்த மாமாக்கள் பொருத்தியிருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

இந்தியாவிலும் இந்த மேஜிக் நடந்துள்ளது. இராஜஸ்தானில் உள்ள பாரேபூட் கல்லூரியில் சோலார் பவர் தொடர்பாகத் தொடங்கப்பட்ட நிறுவனம், இப்போது 93 நாடுகளில் கிளை பரப்பியுள்ளது.

இங்கே பயிற்சி முறை ரொம்பவே டிபரண்ட்.

மொழி தெரியாவிட்டால் என்ன? எழுத்து வாசனையே இல்லாவிட்டால் என்ன?

எலக்ட்ரானிக் பார்ட்ஸ்கள் எல்லாவற்றையும் நிறங்கள் மற்றும் வடிவங்கள் மூலமாகவே அடையாளம் காணக் கற்றுக்கொடுக்கிறார்கள்.

சர்க்கியூட் போர்டில் எந்தக் கலர் வயரை எங்கே இணைக்க வேண்டும் என்பது அவர்களுக்கு அக்குவேறு ஆணிவேறாகத் தெரியும்.

எங்கள் கிராமத்து குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் செய்ய வெளிச்சம் வேண்டும், அதுதான் எங்கள் லட்சியம், என்கிறார்கள் சூரிய மின்சாரத்துக்காகச் சூரியன் போலப் பாடுபடும் இவர்கள்.

இந்தத் திட்டத்தின் ஒரு முக்கியமான ட்விஸ்ட் பாட்டிகள்தான். இந்தத் திட்டத்துக்காக இதற்கான முனைவோர்கள் தேடிப் பிடிப்பது நடுத்தர வயதுப் பெண்களையும் பாட்டிகளையும் மட்டும்தான்.

ஏன் என்கிறீர்களா?

பெண்கள் என்றால் பிள்ளைகளை வளர்க்கப் பிறந்தவர்கள் மட்டுமே, என்கிற முட்டாள்தனமான மைண்ட்செட்டை உடைக்க இது ஒரு வழி.

இளைஞர்கள் படித்தால் உடனே நகரத்திற்கு ஓடிவிடுவார்கள். ஆனால் பாட்டிகள் அப்படியல்ல, அவர்கள் தன் மண்ணை விட்டு எங்கும் போகமாட்டார்கள். சமூக சேவைக்கு அவர்கள் தான் பெஸ்ட் பெட்.

வெறும் சோலார் மட்டும் போதாது என்று அவர்களுக்கு டிஜிட்டல் அறிவு, வங்கிப் பரிவர்த்தனை போன்ற மற்ற விஷயங்களையும் கூட சொல்லிக் கொடுக்கிறார்கள்.

தொழில்நுட்பம் என்பது வெறும் மேலைநாட்டு ஏகபோகம் அல்ல. அது ஒரு பாட்டியின் கையில் இருக்கும் ஸ்க்ரூ டிரைவரிலும் இருக்கிறது. இருட்டு விலகிக் கொண்டிருக்கிறது!

நம் தமிழகத்துக் கிராமங்களும் இதை டிரை பண்ணலாம். இப்போதே மின்வெட்டு பத்து நிமிஷம், அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்று பாட்சா காட்ட ஆரம்பித்து விட்டது.

நமக்கும் சோலார் மாமாக்களும் சோலார் பாட்டிகளும் தேவைதானே!

*****

No comments:

Post a Comment