நிதானமே பிரதானம் – உங்களுக்கான
பார்முலாக்கள்!
நம்
வாழ்க்கை ஒரு ராகுல் டிராவிட் இன்னிங்ஸாக இருக்க வேண்டியது போய், இப்போது டி20 மேட்ச்
போல ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் வேகம். இந்த அவசரக் கோலத்தை மாற்ற சில பார்முலாக்கள்
உள்ளன. இவற்றைக் கொஞ்சம் மனதில் நோட் பண்ணிக்கொள்ளுங்கள்!
காலையில்
அலாரம் அடித்து பதறி அடித்து எழுவதை நிறுத்துங்கள். ஒரு பத்து நிமிடம் முன்னதாக எழுந்து,
அந்த டீ அல்லது காபியை மெதுவாக ரசித்து குடியுங்கள். கடைசி நிமிடம் என்கிற அந்தப் படபடப்பு
உங்கள் ரத்த அழுத்தத்தை ஏற்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள். எதற்கும் பத்து நிமிடத்திற்கு
முன்பு என்பது ஓர் அற்புதமான பார்முலா.
கணினிக்கு
எப்படி ஒரு புரோகிராம் எழுதுகிறோமோ, அதுபோல உங்கள் நாளுக்கு ஒரு சின்ன இலக்கை நிர்ணயம்
செய்யுங்கள். இன்று இதைச் செய்வேன், இதில் என் சக்தியைச் செலவிடுவேன், என்கிற தெளிவு
இருந்தால், வீண் அலைச்சல் குறையும். ஆக, சிறு இலக்கு அதில் தெளிவு என்பது சூப்பரான
பார்முலா.
ஒரே
நேரத்தில் நாலு வேலையைச் செய்வது புத்திசாலித்தனம் என்று நினைக்கிறோம். அது தவறு. மூளை
ஒரு நேரத்தில் ஒரு வேலையைச் செய்யும்போதுதான் துல்லியமாக இருக்கும். ஒரு வேலையை முடியுங்கள், அப்புறம் அடுத்த
விண்டோ திறங்கள். ஒன்றே செய், நன்றே செய், அதையும் இன்றே செய் என்று நம் முன்னோர்கள்
எப்போதோ வாழ்க்கைக்கு ஒரு பார்முலா வகுத்து விட்டார்கள். பாலோ பண்ண வேண்டியதுதான் நம்
கடமை.
லஞ்ச்
பிரேக் என்பது அவசரமாகச் சோற்றை விழுங்குவதற்கல்ல. அந்த முழு ஒரு மணி நேரத்தையும் அனுபவியுங்கள்.
அது உங்கள் மூட் மற்றும் வேலையின் வேகத்தை
எப்படி மாற்றுகிறது என்று பாருங்கள். சாப்பிடும் போது எப்போதும் ஸ்லோ என்பது
லைப் லாங்காக இருப்பதற்கு ஒரு சைலண்ட் பார்முலா.
போன்,
லேப்டாப், டேப்லெட் என்பன போன்ற இந்த எலக்ட்ரானிக் சிலந்திகளிடமிருந்து கொஞ்சம் தள்ளியிருங்கள்.
ஸ்கிரீனைப் பார்ப்பதை நிறுத்தினால், நிஜ மனிதர்களைப் பார்க்கவும், ஒரு புதிய ஹாபி வளர்த்துக்கொள்ளவும்
நேரம் கிடைக்கும். டிஜிட்டல் டீடாக்ஸ் இந்தக் காலத்திற்குத் தேவையான அவசியமான பார்முலா.
அறைக்குள்ளேயே
அடைந்து கிடக்காதீர்கள். பக்கத்தில் இருக்கும் ஒரு பூங்கா அல்லது மரம் செடி இருக்கும்
இடத்திற்குப் போய் வாருங்கள். இயற்கைக்கு உங்கள் ஸ்ட்ரெஸ்ஸை உறிஞ்சும் சக்தி உண்டு.
அவ்வபோது அவுட்டிங்கில் உலவுவது எனர்ஜிக்கான ரகசிய பார்முலா.
வாரம்
முழுவதற்கும் என்ன சாப்பிடப்போகிறோம் என்று பிளான் பண்ணுங்கள். அப்போதுதான் ஜங்க் புட்
ஆர்டர் செய்யும் எண்ணம் வராது. நிதானமாகச் சமைப்பது ஒரு தியானம் போன்றது. எதையும் வடிவேலு
பாணியில் பிளான் பண்ணி பண்ணணும் என்பது இன்றைய வாழ்வியலுக்கான எஸென்ஸியல் பார்முலா.
புத்தகம்
படிப்பது, ஒரு குளியல், அல்லது ஓர் ஐந்து நிமிடம் மூச்சுப் பயிற்சி என இது போன்ற வகையறாக்களில்
ஏதோ ஒன்றை உங்கள் டெய்லி ரொட்டின் ஆக்குங்கள். இது உங்கள் நரம்பு மண்டலத்தை டவுன் ஷிப்ட்
செய்ய உதவும். சின்ன ரிலாக்ஸ், பெரிய பவர் என்பது இதன் பின்னணியில் உள்ள பார்முலா.
எல்லாவற்றுக்கும்
சரி சொல்லும் ஆசாமிக்கு நிம்மதி இருக்காது. உங்கள் நேரத்தை மற்றவர்கள் திருட அனுமதிக்காதீர்கள்.
தைரியமாக இல்லை என்று சொல்லப் பழகுங்கள். இது ஒரு தற்காப்புக் கலை! அநாவசிய பிரச்சனைகளிடமிருந்து
உங்களைத் தற்காத்துக் கொள்ள இது ஒரு பென்டாஸ்டிக்கான செல்ப் டிபென்ஸ் பார்முலா.
வாழ்க்கை
என்பது ஒரு ரேஸ் அல்ல. மெதுவாகப் போனாலும் இலக்கை அடையலாம். இந்த பார்முலாக்கள் அதற்கு
உங்களுக்குக் கியாரண்டி. இந்த பார்முலாக்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இப்போதே சொல்ல வேண்டும் என்றில்லை, ஸ்லோவாக உங்களுக்குத் தோன்றும் போது கூட சொல்லலாம்.
*****

No comments:
Post a Comment