வாழ்வதற்கு ஒரு வழி – ஸ்லோமோஷன்
ரகசியம்!
நம்மிடம்
எல்லாமே இருக்கிறது. அதிவேக இன்டர்நெட், 5ஜி போன், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்.
ஆனால்
நிம்மதி?
அது
மட்டும் அவுட் ஆப் ஸ்டாக்.
ஏன்?
நாம்
ஓடிக்கொண்டே இருக்கிறோம்.
எங்கே?
யாருக்கும்
தெரியாது.
இதற்கு
ஒரு மருந்துதான். அதுதான் ஸ்லோ லிவிங். இதைப் பற்றி நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இன்றும் பார்ப்போம்.
உறவுகள்
என்றால் ஏதோ வாட்ஸ்அப் குரூப் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். எந்த மனிதர்கள் உங்களை
உற்சாகப்படுத்துகிறார்கள், யாருடன் பேசினால் உங்கள் பேட்டரி ஏறுகிறது என்று ஒரு லிஸ்ட்
போடுங்கள். அவர்களுடன் அட்டாச் ஆகுங்கள்.
உங்களைச்
சக்கையாய் உறிஞ்சும் மனிதர்களிடமிருந்து எஸ்கேப் ஆகிவிடுங்கள்.
போனைத்
தூர எறிந்துவிட்டு, நேரில் அமர்ந்து பேசுங்கள். அவர்களுக்குப் பிடித்தது என்ன என்று
அக்கறையாகக் கேளுங்கள். இதுதான் சந்தோஷத்திற்கான பேசிக் அல்காரிதம்.
இன்றைய
டூர் என்பது ஏ பாயிண்டிலிருந்து பி பாயிண்டிற்குப் பறந்து, நாலு செல்பி எடுத்து, விசிட்டட்
என்று டிக் போடுவதுதான். இது டூர் அல்ல, ஒரு விதமான மாஸ் ஹிஸ்டீரியா.
இதற்குப்
பதில் ஸ்லோ டிராவல் செய்யுங்கள்.
விமானத்தைத்
தவிர்த்துவிட்டு ரயிலிலோ, பேருந்திலோ போங்கள். சைக்கிள் கூட பெஸ்ட்தான். நடந்து கூட
போகலாம்.
அந்த
ஊர் காரர்களுடன் டீ குடியுங்கள். அவர்களின் கதைகளைக் கேளுங்கள்.
இதற்காக
நீங்கள் சுவிட்சர்லாந்து போக வேண்டாம். உங்கள் பக்கத்துத் தெருவில் இதுவரை நீங்கள்
பார்க்காத ஒரு சந்து இருக்கும். அங்கே ஒரு நடை போடுங்கள். அது கூட ஒரு ஸ்லோ டிராவல்தான்!
வாழ்க்கையை
ஒரு சமநிலைக்குக் கொண்டு வருவது உங்கள் மனநலத்திற்கு ஒரு பூஸ்ட் கொடுக்கும்.
ஒரு
பேப்பர் எடுத்து, ஒரு நாளில் நீங்கள் எதற்கெல்லாம் நேரம் செலவழிக்கிறீர்கள் என்று எழுதுங்கள்.
அப்போது உங்களுக்கே தெரியும் உங்கள் நேரம் எப்படி பேஸ்புக்கிலும், வாட்ஸ்ஆப்பிலும்,
இன்ஸ்டாவிலும் வேகமாகக் கரைந்து கொண்டிருக்கிறது என்பது.
தூங்குவதற்கு
முன்னால் போனில் கண்டதையும் படித்துக் கவலைப்படுவதை நிறுத்துங்கள். அதற்குப் பதில்
ஒரு சுடுதண்ணீர் குளியல் அல்லது ஒரு நல்ல புத்தகம். உங்கள் மூளை உங்களுக்கு தேங்க்ஸ்
சொல்லும்.
பாஸ்ட்
பேஷன் என்பது ஒரு பெரிய மாயவலை. வாராவாரம் புது டிரெண்ட் என்று துணிகளைக் குவிப்பது
சுற்றுச்சூழலுக்கும் கேடு, அதைத் தைக்கும் தொழிலாளர்களுக்கும் சாபம்.
எங்கே
தயாரானது? எப்படித் தயாரானது? என்று கொஞ்சம் ரிசர்ச் செய்யுங்கள்.
உங்கள்
கப்போர்டில் ஏற்கனவே இருக்கும் துணிகள்தான் உலகிலேயே மிகச்சிறந்த சஸ்டைனபிள் உடைகள்.
அதைத் தாண்டி வேண்டுமென்றால் எளிமையான கடைகளைத் தேடுங்கள். எளிமை எப்போதும் தங்கம்!
வாழ்க்கை
என்பது ஓடி முடிப்பதற்கான ஒரு பந்தயமல்ல, அது ரசித்து நகர்வதற்கான ஓர் அழகான ஊர்வலம்.
யாரைச்
சந்தித்தால் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கிறது?அந்த ஒரு மனிதருக்கு இன்று போன் செய்யாமல்,
நேரில் போய் ஒரு காபி வாங்கிக் கொடுத்துப் பேசுங்களேன். உங்கள் ஸ்லோ லிவிங் அங்கிருந்து
ஆரம்பிக்கட்டும்!
கேட்ஜெட்டுகளுக்கு
ஒரு குட்பை சொல்லி விட்டு, கெஸ்ட்டுகளுடன் பிரண்ட்ஸ்களுடன் அலவளாவுங்கள். விசயம் அவ்வளவுதான்.
*****

No comments:
Post a Comment