Saturday, 16 May 2026

அனிமல் கிங்டம் – காட்டின் காமெடி கிளப்கள்!

அனிமல் கிங்டம் – காட்டின் காமெடி கிளப்கள்!

இந்த உலகத்தில் புத்திசாலிகள் யார்?

மனிதர்கள்தான்!

மனிதர்களை விட சில விசயங்களில் விலங்குகள் அதி புத்திசாலிகளாக இருக்கின்றன.

மனிதர்களுக்கு இருக்கும் சிறப்பே ஹியூமர் சென்ஸ்தான்.

ஆழ்கடலில் திமிங்கிலம் முதல் ஆகாயத்தில் காக்கை வரை எல்லாமே ஒரு வகையில் கவுண்டமணி செந்தில் ரேஞ்சுக்கு பெர்பார்ம் செய்கின்றன. வெறும் இரை தேடுவது மட்டுமில்லை, இவற்றுக்கு நல்ல ஹியூமர் சென்ஸ் மற்றும் இன்டெலிஜன்ஸ் இருக்கின்றன!

அப்படிப்பட்ட இயற்கையின்  8 பெஸ்ட் காமெடி மற்றும் இன்டெலிஜென்ட் மேட்டர்களைப் பார்ப்போமா?

1. பப்புள் நெட் திமிங்கிலங்கள்

ஹம்ப் பேக் திமிங்கிலங்கள் ஒரு விசித்திரமான பார்ட்டி நடத்துகின்றன. கடலுக்கு அடியில் கூட்டமாகச் சேர்ந்து கொண்டு மூச்சுக் காற்றால் குமிழ்களை ஒரு வலை போல உருவாக்கும். மீன்கள் அந்தக் குமிழி வளையத்திற்குள் சிக்கிக் கொள்ளும். இது ஓர் அண்டர்வாட்டர் டிராப். மீன்கள் விழிக்கும்போது, திமிங்கிலங்கள் வாயைத் திறந்து ஒரு பிடி பிடிக்கும்.

2. ஒராங்குட்டான் ஸ்பா

இந்த வகைக் குரங்குகள் கொஞ்சம் ஹைஜீன் பார்ட்டிகள். சில குறிப்பிட்ட இலைகளை மென்று நுரை வரவழைத்து, அதை சோப்பு போல உடம்பில் தேய்த்துக் கொள்ளும். மழை பெய்தால் இலைகளையே குடையாகப் பிடித்துக் கொள்ளும் மேனர்ஸ் இவற்றுக்குத் தெரியும்.

3. காக்கைக்குப் பகை மறக்காது!

காக்கைகளிடம் ஜாக்கிரதையாக இருங்கள். நீங்கள் ஒரு காக்கையைத் துரத்தினால், அது உங்கள் முகத்தை அப்படியே ஸ்கேன் செய்து மெமரியில் வைத்துக் கொள்ளும். பிறகு தன் நண்பர்களைக் கூப்பிட்டு, இதோ இவன் தான் அந்த வில்லன் என்று காட்டும். ஆனால், நீங்கள் சோறு வைத்தால் கிப்ட் ஆகப் பளபளப்பான கற்களைக் கொண்டு வந்து கொடுக்கும் குணமும் அதற்குண்டு!

4. டால்பின் திருடர்கள்

டால்பின்கள் செம புத்திசாலிகள். கடலில் மீனவர்கள் வைத்திருக்கும் நண்டுப் பொறிகளுக்குள் நைசாக நுழைந்து, அங்கே இருக்கும் மீன்களை மட்டும் சுட்டுவிட்டு ஓடிவிடும். இந்தத் திருட்டு வித்தையைத் தன் அடுத்த தலைமுறைக்கும் சொல்லிக் கொடுக்கின்றன இந்த சீ புட் கொள்ளையர்கள்.

5. இன்டீரியர் டிசைனர் குருவி

பவர் பேர்டு என்றொரு வகை உண்டு. ஆண் குருவிகள் ஒரு சின்ன வீடு கட்டி, அதைச் சுற்றி வண்ணக் கல், பூக்கள், சோடா மூடி என்று பல கலர் பொருட்களை அடுக்கி வைக்கும். எல்லாம் பெண் குருவியைக் கவர்வதற்குத்தான். பக்கத்து வீட்டுப் பையனின் டெக்கரேஷன் நன்றாக இருந்தால், நைசாகப் போய் அங்கிருக்கும் பொருட்களைத் திருடி வந்து தன் வீட்டில் வைத்துக் கொள்ளும்!

6. எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் ஆக்டோபஸ்

எட்டு கால் வைத்திருக்கும் இந்தச் சதுரங்க வேட்டைக்காரன் ஒரு நிஜமான ஹூடினி. எவ்வளவு சிறிய ஓட்டையாக இருந்தாலும் உடம்பைச் சுருக்கிக் கொண்டு தப்பித்துவிடும். இரவு நேரத்தில் அக்வாரியத்தில் இருந்து வெளியே வந்து, பக்கத்து தொட்டியில் இருக்கும் மீன்களைச் சாப்பிட்டுவிட்டு, எதுவுமே தெரியாதது போல் தன் தொட்டிக்கே திரும்பிச் சென்று படுத்துக் கொள்ளும்!

7. போதை வண்டுகள்

வண்டுகளுக்கும் சரக்கு பிடிக்கும்! சில மரம் மற்றும் பழங்களில் இருந்து வழியும் திரவம் வெயிலில் ஊறி ஆல்கஹால் ஆகிவிடும். அதை அறியாமல் குடித்துவிட்டு, வண்டுகள் நேராகப் பறக்க முடியாமல் தள்ளாடும். அந்தப் போதையில் வழக்கமான டான்ஸ் ஆட முடியாமல் தடுமாறி, போதை தெளிந்த பிறகு தான் கூட்டுக்குத் திரும்பும்.

8. பாரட் பிஷ் – தூக்கமே ஒரு மேஜிக்!

இந்தப் பாரட்பிஷ் இரவு தூங்கும் போது தன் வாயிலிருந்து ஒரு ஜவ்வுப் பையை  வெளியிடும். அது ஒரு டிரான்ஸ்பரன்ட் தூக்கப் பை போல மீனைச் சுற்றி மூடிக்கொள்ளும். இதனால் அதன் வாசனை எதிரிகளுக்குத் தெரியாது. இது ஒரு நேச்சுரல் அலார்ட் சிஸ்டம்.

இயற்கையில் உயிர் பிழைப்பது மட்டுமே வேலையல்ல. கொஞ்சம் சிரிப்பும் புத்திசாலித்தனமும் கொண்டாட்டமும் கலந்ததுதான் வாழ்க்கை என இந்த விலங்குகள் நமக்குச் சொல்கின்றன. வெற்றிக் கதைகள் மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் இருக்கின்றன.

*****

No comments:

Post a Comment