Sunday, 29 January 2023

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

இன்று காலை 11.00 மணி அளவில் பள்ளிகளில் எடுக்க வேண்டிய தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

மகாத்மா காந்தியடிகள் நினைவு நாள்

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

            இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன் / குடிமகள் ஆகிய நான் நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர் மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்க மாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும் உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன்.

இதன் PDF ஐப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்

Click Here to Download

No comments:

Post a Comment