Sunday, 30 June 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 01.07.2024 (திங்கள்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)                  தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று டி20 உலகக் கோப்பையைக் கைப்பற்றியது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி.

2)                  கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்க அரசு உறுதி பூண்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

3)                  கள்ளச்சாராயம் தயாரிப்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் மற்றும் பத்து லட்சம் அபராதம் விதிக்கும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.

4)                  அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை மாவட்டத்துக்கு வெளியேயும் பணி நிரவல் செய்யலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

5)                  வரும் கல்வியாண்டிலிருந்து கலை அறிவியல் கல்லூரிகளில் ஒரே நேரத்தில் தேர்வுகள் துவங்கி முடிவுகள் வெளியாகும்.

6)                  ஒவ்வொருவரும் மரங்களை வளர்த்து பூமித்தாயைக் காக்க வேண்டும் என்று பிரதமர் மனதின் குரல் நிகழ்ச்சியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

7)                  தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

8)                  மகாராஷ்டிராவின் முதல் பெண் தலைமைச் செயலாளராக சுஜாதா சவுனிக் நியமிக்கப்பட்டுள்ளார்.

9)                  ஜியோ, ஏர்டெல்லைத் தொடர்ந்து வோடாபோன் நிறுவனமும் அலைபேசி கட்டணங்களை உயர்த்தியது.

10)              நைஜீரியாவில் மூன்று இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 18 பேர் பலியாகினர்.

 English News

1) Team India led by Rohit Sharma won the T20 World Cup after winning the match against South Africa.

2) The Chief Minister has said that the government is committed to completely eradicate the sale of fake liquor.

3) An amendment is to be introduced to impose life imprisonment and a fine of Ten lakh for producing fake liquour.

4) The school education department has announced that excess teachers working in government aided schools can be posted outside the district.

5) From the next academic year, the examinations will be started simultaneously in Arts and Science colleges and the results will be released.

6) The Prime Minister appealed to everyone to plant trees and save the mother earth in the Mind Voice program.

7) Meteorological Department has said that there is a chance of rain in Tamil Nadu for the next five days.

8) Sujata Saunik has been appointed as the first woman Chief Secretary of Maharashtra.

9) After Jio, Airtel, Vodafone also hiked mobile tariffs.

10) 18 killed in three blasts in Nigeria.

Friday, 28 June 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 29.06.2024 (சனி)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)                  உலக முதலீட்டாளர்களைத் தமிழகம் நோக்கி ஈர்க்க முதல்வர் அமெரிக்கா செல்கிறார்.

2)                  சென்னானூர் அகழாய்வில் சுடுமண் முத்திரை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

3)                  கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்தது.

4)                  நேருக்கு நேர் நிகழ்ச்சியில் டிரம்பை எதிர்கொள்ள பைடன் திணறியதால் அதிபர் வேட்பாளரை மாற்ற ஜனநாயகக் கட்சியினர் ஆலோசித்து வருகின்றனர்.

5)                  சென்னை, தஞ்சை மற்றும் திருச்சியில் 6746 அடுக்கு மாடிக் குடியிருப்புகள் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

6)                  புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்துவதற்கான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

7)                  88 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குத் தலைநகர் டெல்லியில் கனமழைப் பொழிந்ததால் இயல்பு வாழ்க்கை அங்கு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

8)                  பாகிஸ்தானில் வெயிலுக்குப் பலியானோர் எண்ணிக்கை 550 ஐத் தாண்டியது. அதனால் அங்கு சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

9)                  ஜியோவைத் தொடர்ந்து ஏர்டெல்லும் கட்டண உயர்வை அறிவித்தது.

10)              டி20 உலகக் கோப்பையில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இறுதிப் போட்டியில் இன்று மோதுகின்றன.

 English News

1) CM goes to USA to attract global investors towards Tamil Nadu.

2) A flint seal has been found in Chennanur excavations.

3) Death toll rises to 65 due to counterfeit liquor in Kallakurichi.

4) Democrats are mulling a change of presidential nominee as Biden struggles to face Trump in a direct discussing event.

5) Chief Minister has announced that 6746 flats will be constructed in Chennai, Tanjore and Trichy.

6) A bill for upgradation of Pudukottai, Thiruvannamalai, Namakkal and Karaikudi to Municipal Corporation has been tabled in the Assembly.

7) Heavy rains in the capital city Delhi which is the worst in 88 years have affected the normal life there.

8) Death toll from heatstroke in Pakistan crosses 550. Hence a health emergency has been declared there.

9) Following Jio, Airtel also announced tariff hike.

10) India vs South Africa in T20 World Cup final today.

Thursday, 27 June 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 28.06.2024 (வெள்ளி)

தமிழ் செய்திகள்

1)                  கலைஞர் பெயரில் திருச்சியில் உலகத் தரத்தில் நூலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

2)                  75000 ரயில் பெட்டிகள் தயாரித்து சென்னை ஐ.சி.எப். சாதனை படைத்துள்ளது.

3)                  நேட்டோ அமைப்பின் தலைவராக நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

4)                  ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் செல்போன் கட்டணங்களை 12 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.

5)                  எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு மதிப்பிக்க பென் பிட்டர் விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

6)                  நடப்பு ஆண்டில் 400 கிளைகளைத் திறக்க உள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்தள்ளது.

7)                  டி 20 போட்டியில் ஆப்கன் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்கா அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

8)                  டி 20 போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியாவும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

 English News

1) The Chief Minister has announced that a world-class library will be set up in Trichy in the name of the Kalignar.

2) A record high of 75000 coaches manufactured by Chennai ICF.

3) Dutch Prime Minister Mark Rutte has been chosen as the head of NATO.

4) Reliance Jio has hiked cell phone tariffs by 12 percent to 25 percent.

5) Author Arundhati Roy has been announced to be honored with the prestigious Ben Bitter Award.

6) State Bank of India has announced plans to open 400 branches in the current year.

7) South Africa qualified for the T20 final after winning the match against Afghanistan.

8) India also qualified for the final after defeating England in T20.

Wednesday, 26 June 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 27.06.2024 (வியாழன்)

தமிழ் செய்திகள்

1)                  இரண்டாவது முறையாக மக்களவை சபாநாயகராக ஆனார் ஓம் பிர்லா.

2)                  5ஜி அலைக்கற்றை ஏலம் தொடங்கியது. முதல் நாளில் 11000 ஆயிரம் கோடிக்கு ஏலம் கோரப்பட்டுள்ளது.

3)                  கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தால் இறந்தோர் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.

4)                  வாட்ஸ் ஆப் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை மின்சார வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

5)                  பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் பரிசீலனையில் இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

6)                  இன்று நடைபெற இருக்கும் நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்ற உள்ளார்.

7)                  நிலவின் மண், பாறை மாதிரிகளுடன் பூமிக்குத் திரும்பியது சீன விண்கலம்.

 English News

1) Om Birla become the Lok Sabha Speaker for the second time.

2) 5G spectrum auction started. 11,000,000 crore bids have been requested on the first day.

3) The death toll due to Kallakurichi liquor has increased to 63.

4) Electricity Board has introduced the facility of paying electricity bills through WhatsApp.

5) Minister Thangam Tennarasu has said that the old pension scheme is under consideration by the government.

6) The President is going to address the Parliamentary Joint Committee meeting to be held today.

7) Chinese spacecraft returned to Earth with lunar soil and rock samples.


Tuesday, 25 June 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 26.06.2024 (புதன்)

தமிழ் செய்திகள்

1)      2026 ஆம் ஆண்டுக்குள் 76000 அரசுப் பணிகள் நிரப்பப்படும் என முதல்வர் உறுதியளித்துள்ளார்.

2)      மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

3)      வெப்ப அலையின் தாக்கம் பேரிடராக அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

4)      அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறார் அறிவியல் பூங்கா நிறுவப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

5)      மக்களவை எதிர்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

6)      இன்று மக்களவை சபாநாயகரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.

7)      உலகெங்கும் தகவல் தொழில் நுட்பத் துறையில் கடந்த ஆறு மாதத்தில் 98000 பேர் வேலை இழந்துள்ளனர்.

 English News

1) CM has promised to fill up 76000 government jobs by 2026.

2) Heavy rain is likely to occur in six districts including Nilgiris and Coimbatore due to variation in speed of westerly winds.

3) Government of Tamil Nadu has announced that the effect of heat wave will be declared as a calamity.

4) School Education Minister Anbil Mahesh Poiyamozhi has announced that a children's science park will be established at the Anna Centenary Library.

5) Rahul Gandhi has been chosen as the Leader of the Opposition in the Lok Sabha.

6) The election to elect the Speaker of the Lok Sabha is going to be held today.

7) 98000 people have lost their jobs in last six months in information technology industry worldwide.

Monday, 24 June 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 25.06.2024 (செவ்வாய்)

தமிழ் செய்திகள்

1)      ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு அடிப்படைக் கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டம் கற்பிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

2)      தமிழகத்தில் சூன் 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3)      கீழடியில் நடைபெற்று வரும் பத்தாம் கட்ட அகழாய்வுப் பணியில் பாசி, கண்ணாடி மணிகள் உள்ளிட்ட 27 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

4)      அரசு சட்டக் கல்லூரிகளில் சட்டத்தமிழ் என்ற புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

5)      அடுத்த ஆண்டு முதல் சூன் 3 ஆம் தேதி செம்மொழி தமிழ் நாளாகக் கொண்டாடப்படும் என அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.

6)      நாளை மக்களவை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். நாளை மறுதினம் நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார்.

7)      நீட், நெட் தேர்வுகளில் முறைகேடுகளைத் தொடர்ந்து யுபிஎஸ்சி தேர்வறைகளில் செயற்கை நுண்ணறிவு காமிராக்களைப் பொருத்த யுபிஎஸ்சி முடிவு செய்துள்ளது.

8)      ஹஜ் பயணத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1300 ஆக உயர்ந்தது.

 English News

1) School Education Minister Anbil Mahesh Poiyamozhi has announced that basic computer and artificial intelligence curriculum will be taught to students from class VI to class IX.

2) The Meteorological Department has said that there is a possibility of moderate rain in Tamil Nadu till June 30.

3) 27 items including glass beads have been found in the tenth phase of excavation work going on in Keezhadi.

4) Minister Raghupathi said that a new syllabus called ‘Chatta Tamil’ will be introduced in government law colleges.

5) Minister Saminathan has announced that June 3 will be celebrated as Classical Tamil Day from next year.

6) Lok Sabha Speaker will be elected tomorrow. The President will address the joint committee meeting of Parliament the day after tomorrow.

7) UPSC has decided to install artificial intelligence cameras in UPSC exam halls following the irregularities in NEET, NET exams.

8) Hajj death toll rises to 1300.

Sunday, 23 June 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 24.06.2024 (திங்கள்)

தமிழ் செய்திகள்

1)      இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் உயர்கல்வி, பள்ளிக்கல்வி, வருவாய்த் துறை மானிய கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற உள்ளது.

2)      இன்று கூடும் மக்களவையில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்க உள்ளனர்.

3)      வெப்ப அலை காரணமான சவூதி அரேபியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது.

4)      நீட் முறைகேடு தொடர்பான விசாரணையைச் சி.பி.ஐ. தொடங்கியது.

5)      கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 57 ஆக அதிகரித்தது. இதுவரை கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 English News

1) In today's Tamilnadu Legislative Assembly meeting, there will be a discussion on higher education, school education, revenue department grant request.

2) New MPs will be sworn in today in the Lok Sabha.

3) The death toll in Saudi Arabia due to heat wave has crossed a thousand.

4) CBI to investigate NEET scam started

5) Kallakurichi counterfeit liquor death toll rises to 57. So far 11 people have been arrested in connection with the sale of counterfeit liquor.

Saturday, 22 June 2024

NMMS – SAT – வடிவியல் பகுதிக்கான மாதிரி வினாக்கள் (பகுதி 3)

NMMS – SAT – வடிவியல் பகுதிக்கான மாதிரி வினாக்கள் (பகுதி 3)

1) 


விடை : (3) x + b + c = 2 (a + b + c)

விடைக்குறிப்பு :

முக்கோணத்தின் வெளிக்கோணங்களின் கூடுதல் உள்ளெதிர்க் கோணங்களின் கூடுதலுக்குச் சமம். அதன்படி,

x = b + c

y = a + c

z = a + b

எனவே, x + b + c     = b + c + a + c + a +b

               x + b + c       = 2 (a + b + c)

 2) 


விடை : (1) 140

விடைக்குறிப்பு :

ஒரு கோடமைக் கோணங்களின் கூடுதல் 1800.

எனவே 4x + 8x – 20 – x        = 1800

            13x – 20                       = 1800

                        13x                              =  1800 + 20

            x                                  = 1820 / 13

            x                                  = 140

 3) 


விடை : (2) 1150

விடைக்குறிப்பு :

படத்தில் காண்பது இணைகோடுகளைக் மேலும் கீழும் குறுக்குவெட்டி வெட்டுவதால் ஏற்படும் ஒரு சோடி உட்கோணங்கள்.

இதன் கூடுதல் 1800 + 1800             = 3600

எனவே          1150 + x + 1300           = 3600

                        x + 2450                       = 3600 - 2450

                                                x                                  =  1150

 4) 


விடை : (1) 2200

விடைக்குறிப்பு :

முக்கோணம் BDC இல்

x0 + y0 + 700         = 1800

x0 + y0                         = 1100

முக்கோணம் ACE இல்

z0 + w0 + 700        = 1800

z0 + w0                         = 1100

எனவே          x0 + y0 + z0 + w0                      = 1100 + 1100

                                                                                                = 2200