வாக்குப்பதிவு
இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் கடைசி சுற்றுக்கு முன் தபால் வாக்கு எண்ணிக்கை விவரங்கள்
வெளியாகும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில்
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு,
“தபால்
வாக்குகள் முதலில் எண்ணப்படும்.
பல்வேறு
மாநிலங்களில் இருந்து பொதுப் பார்வையாளர்கள் தமிழகம் வந்துள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரத்தில்
பதிவான வாக்குகளின் கடைசி சுற்றுக்கு முன் தபால் வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளியாகும்.
ஒவ்வொரு
சுற்றுக்கும் வாக்கு எண்ணிக்கை குறித்து அரசியல் பிரமுகர்களுக்கு தெரிவிக்கப்படும்.
வாக்கு
எண்ணும் மையங்களில் எந்தவிதமான பிரச்னைகளும், ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
வாக்கு
எண்ணிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்படும். வாக்கு எண்ணும் மையத்திற்குள், பத்திரிகையாளர்களுக்கு
தொலைபேசி உபயோகிக்க அனுமதி கிடையாது.” என்றார்.
இதேபோல் வாக்கு எண்ணிக்கையின்போது தபால் வாக்குகள் முதலில் எண்ணத் தொடங்கப்படும் எனத் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உறுதி அளித்துள்ளார். தபால் வாக்குகளை எண்ணத் தொடங்கி 30 நிமிடங்களுக்கு பிறகே, EVM வாக்குகள் எண்ணப்படும் என அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment