NMMS தேர்வுக்கு வடிவியல் பகுதியில் அறிந்திருக்க வேண்டிய கருத்துகள்
முக்கோணம் தொடர்பானவை
Ø முக்கோணத்தின் மூன்று உள் கோணங்களின்
கூடுதல் 1800
Ø முக்கோணத்தின் மூன்று வெளிக்கோணங்களின்
கூடுதல் 3600
Ø முக்கோணத்தின் வெளிக்கோணம் உள்ளெதிர்க்
கோணங்களின் கூடுதலுக்குச் சமம்.
Ø முக்கோணத்தின் இரு பக்கங்களின் கூடுதல்
மூன்றாவது பக்கத்தை விட அதிகம்.
Ø ஒரு முக்கோணத்தில் அதிகபட்சம் மூன்று
குறுங்கோணங்கள் அமையும் அல்லது ஒரு அதிகபட்சம் ஒரு செங்கோணம் அமையும். அல்லது அதிகபட்சம்
ஒரு விரிகோணம் அமையும்.
கோணம் தொடர்பானவை
Ø பூச்சியக் கோணம் 00
Ø குறுங்கோணம் 10 லிருந்து
890
Ø செங்கோணம் 900
Ø விரிகோணம் 910லிருந்து
1790
Ø நேர்க்கோணம் 1800
Ø பின்வளைவுக் கோணம் 1810லிருந்து
3590
Ø முழுக்கோணம் 3600
Ø நிரப்புக்கோணங்கள் : இரு கோணங்களின்
கூடுதல் 900
Ø மிகைநிரப்புக் கோணங்கள் : இரு கோணங்களின் கூடுதல் 1800
பிதாகரஸ் தேற்றம்
Ø ஒரு செங்கோண முக்கோணத்தின் கர்ணப்
பக்கத்தின் வர்க்கமானது மற்ற இரு பக்கங்களின் வர்க்கங்களின் கூடுதலுக்குச் சமம்.
Ø ஒரு சுவரில் ஏணி சாத்தி வைக்கப்படும்
போது அது செங்கோண முக்கோணத்தை அமைக்கிறது. இங்கு ஏணி கர்ணப் பக்கமாகவும், தரையிலிருந்து
ஏணி சுவரைத் தொடும் தூரம் உயரமாகவும், தரையிலிருந்து ஏணி இருக்கும் தூரம் அடிப்பக்கமாகவும்
அமையும். இதனின்று,
ஏணியின் நீளம்2 = உயரம்2 + அடிப்பக்கம்2
சர்வசமம்
Ø குறியீடு ≅
Ø சர்வசம உருவங்கள் சம அளவும் சம வடிவும்
உடையவை.
Ø சர்வசமத் தன்மையைச் சோதிக்கும் முறை
மேற்பொருத்தும் முறை.
Ø சர்வசம முக்கோணங்களுக்கான நிபந்தனைகள்
பக்கம் – பக்கம் – பக்கம் கொள்கை
(ப-ப-ப)
பக்கம் – கோணம் – பக்கம் கொள்கை
(ப-கோ-ப)
கோணம் – பக்கம் – கோணம் கொள்கை
(கோ-ப-கோ)
செங்கோணம் – கர்ணம் – பக்கம் கொள்கை
(செ-க-ப)
குறுக்குவெட்டி
இரு இணைகோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டும் போது
Ø ஒத்தக் கோணங்கள் சமம்.
Ø ஒன்று விட்ட உட்கோணங்கள் சமம்.
Ø ஒன்று விட்ட வெளிக்கோணங்கள் சமம்.
Ø ஒரு பக்கம் அமைந்த உட்கோணங்களின்
கூடுதல் 1800
Ø ஒரு பக்கம் அமைந்து வெளிக்கோணங்களின்
கூடுதல் 1800
மேலும்
இரு கோடுகள் வெட்டுவதால் உண்டாகும் குத்தெதிர்க் கோணங்கள்
சமம்.
No comments:
Post a Comment