Wednesday 5 June 2024

அனைவருக்கும் சோறிட வேண்டும் என்ற எண்ணத்தை விஜயகாந்திற்குள் விதைத்த சம்பவம்!

 


அகல் விளக்கு படத்தில் நடித்த போது காலையிலிருந்து மதியம் வரை சாப்பிடாமல் நடிப்பதற்காகக் காத்திருந்தார் விஜயகாந்த். ஷோபா அப்போது பிரபலமான மற்றும் பரபரப்பான நடிகை. அவரது வருகைக்காக அனைவரும் காத்திருந்தனர்.

பசி பொறுக்க முடியாத விஜயகாந்த் சாப்பிட உட்கார்ந்து விட்டார்.

அந்த நேரம் பார்த்து, ஷோபா வந்து விட்டதாகச் சொல்லி, அவரைச் சாப்பிடக் கூட விடாமல் உடனடியாக நடிப்பதற்காக அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள். அவர் பொறுக்க முடியாத பசியோடு நடித்துக் கொடுத்தார். இந்தச் சம்பவம்தான் அவரை அனைவருக்கும் சோறிட வேண்டும் என்ற உணர்வைத் தூண்டியது.

எதற்காகப் பாடுபடுகிறோம், கஷ்டப்படுகிறோம்? ஒரு சாண் வயிற்றுக்குத்தானே. அதற்கான சாப்பாட்டை நிம்மதியாகச் சாப்பிட முடியாவிட்டால் பாடுபடுவதிலும், கஷ்டப்படுவதிலும் என்ன அர்த்தம் இருக்கிறது?

மனிதர்களின் பசியை மதிக்க தெரியாவிட்டால் அதில் என்ன அறம் இருக்கிறது?

இந்தச் சிந்தனைகள்தான் விஜயகாந்திற்குள் தன்னை நாடி வருபவர்கள் அனைவருக்கும் உணவிட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தை விதைத்தது.

No comments:

Post a Comment