NMMS - SAT - வடிவியல் பகுதியில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் குறித்த குறிப்புகள்
இதுவரை நாம் பார்த்த ஐந்து வருட வினாத்தாள்களில் இடம் பெற்றிருந்த
வினாக்கள் கேட்கப்பட்டுள்ள விதத்திலிருந்து நாம் பின்வரும் குறிப்புகளை அறிந்து கொள்ள
இயலும். அவையாவன,
Ø படிப்பறிவுத் திறன் (SAT) பகுதியில்
வடிவியல் பாடப்பகுதியிலிருந்து மூன்றிலிருந்து நான்கு வினாக்கள் கேட்கப்பட வாய்ப்புள்ளது.
Ø வினாக்கள் அறிதலைச் சோதிக்கும் நேரடி
வினாக்களாகவோ அல்லது புரிதலை வெளிக்கொணரும் இடைநிலை வினாவாகோ அல்லது உயர் சிந்தனை வினாவாகவோ
அமையவோ வாய்ப்புள்ளது.
Ø முக்கோணத்தின் பண்புகள் மற்றும்
பிதாகரஸ் தேற்றத்தைப் பயன்படுத்தித் தீர்வு காணும் கணக்குகள் கட்டாயம் இடம்பெற வாய்ப்புள்ளது.
Ø குறுக்குவெட்டி தொடர்பான கணக்கு
ஒன்றையும் எதிர்பார்க்கலாம்.
Ø வடிவியல் உருவங்களான சதுரம் , செவ்வகம்
, முக்கோணம் , வட்டம் , நாற்கரம் இணைகரம்
, சரிவகம், சாய்சதுரம் ஆகியவற்றின் பண்புகள் மற்றும் கோண வகைகள் குறித்து அறிந்திருத்தல்
அவசியம். இவை சார்ந்த நேரடி வினாக்கள் கேட்கப்பட வாய்ப்புள்ளது.
நுணுக்கங்களும் நுட்பங்களும்
(Tips & Tricks)
ü கொடுக்கப்பட்ட கணக்கு கோண வகையைச்
சேர்ந்தது என்றால் ஒரு கோடமை கோணங்கள் =
1800, ஒரு புள்ளியமை கோணங்கள் = 3600 என்பதைப் பயன்படுத்த முடியுமா
என்று பாருங்கள்.
ü முக்கோணம் தொடர்பான கணக்குகளில்
பிதாகரஸ் தேற்றத்தைப் பயன்படுத்த முடியுமா என்று பாருங்கள்.
ü முக்கோணங்களில் கோணவகை தொடர்பான
கணக்குகளில் உள்ளெதிர்க் கோணங்கள் வெளிக்கோணத்திற்குச் சமம் என்ற கருத்தைப் பயன்படுத்த
முடியுமா என்று பாருங்கள்.
ü குறுக்குவெட்டி தொடர்பான கணக்குகளில்
ஒத்தக்கோணங்கள் சமம், ஒன்றுவிட்ட கோணங்கள் சமம், குத்தெதிர்க் கொணங்கள் சமம் என்ற கருத்தைப்
பயன்படுத்தி முயற்சி செய்யுங்கள்.
ü நேரடி வினாக்களுக்கு வடிவியல் தொடர்பான
அடிப்படைக் கருத்துகளை மனதில் இருத்திக்
கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment